மீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்

sivakarthikeyan and yuvan shankar rajaவிஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை மித்ரன் இயக்கியிருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெறவே மித்ரனின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்வி நெடு நாட்களாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அதிரடி அறிவிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 15வது படத்தை மித்ரன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்படத்தை சீமராஜா படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.

தற்போது இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டங்கை செய்யவுள்ளார்.

படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார்.

2013ல் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருந்தார். அதுபோல் இரும்புத்திரை படத்திற்கும் யுவனே இசை.

தற்போது 2வது முறையாக சிவா மற்றும் மித்ரனுடன் யுவன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post