பியார் பிரேமா காதல் படம் வெற்றி; இளனுக்கு கார் பரிசளித்த யுவன்

பியார் பிரேமா காதல் படம் வெற்றி; இளனுக்கு கார் பரிசளித்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan and elanகடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை புரிந்து வரும் படம் “பியார் பிரேமா காதல்”.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர்.

” இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்” என்கிறார் இயக்குனர் இளன்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில்…

“ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன்.

படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. எங்கள் இயக்குனர் இலன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார்.

யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும் , உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இலன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து , தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்ப்போம்’ என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு விஜய்சேதுபதி-25; தனுஷ் 15 லட்சம் உதவி

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு விஜய்சேதுபதி-25; தனுஷ் 15 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and dhanushகடந்த 50 ஆண்டுகளில் பார்க்காத வெள்ளத்தை தற்போது கேரளா கண்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் கேரள தேசமே வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது.

தற்போது இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால், பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் வரும் (ஆகஸ்ட் 25) ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரோகினி, பிரகாஷ்ராஜ், அபி சரவணன் உள்ளிட்ட நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதி ரூ. 25 லட்சமும், தனுஷ் 15 லட்சமும் நிதியை கொடுத்து உதவியுள்ளனர்.

5கிகி எடையில் *அப்பு சிலிண்டர்*; எளிய மக்களுக்கு HP நிறுவனத்தின் சேவை

5கிகி எடையில் *அப்பு சிலிண்டர்*; எளிய மக்களுக்கு HP நிறுவனத்தின் சேவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OMR Food Street launches HP Gas Appuஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஓ எம் ஆர் ஃபுட் ஸ்ட்ரீட் உடனான கூட்டாண்மையுடன், 15 ஆகஸ்ட் அன்று நாவலூரில் நடைபெற்ற விழாவில் HP கேஸ் அப்பு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வகை அப்பு சிலிண்டர்களை OMR ஃபுட் ஸ்ட்ரீட் அவுட்லெட்டுகளில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக விழாவில் LPG, HPCl பொது மேலாளர் திருமதி.எஸ்.அம்பாபவானி குமார், திருமதி. பத்மினி சாவாலி, திருமதி. கெளஷிக் ராய் செளத்ரி, ஆகியோர் பங்கு கொண்டனர்.

ஒரு சிறிய அளவிலான, கையடக்கமான, சிக்கல்கள் அற்ற இந்த வகை கேஸ் சிலிண்டர்கள் 5கிகி அளவு கொண்டவை.

முன்பதிவு இல்லாமல் எளிதாக மக்களுக்கு கிடைக்கும்படியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதில் ரீஃபில் செய்யும் வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

ரீஃபில் செய்யும் போது எரிபொருளுக்கான விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர்களை HPCL-ன் வினியோகஸ்தர்கள் அல்லது OMR ஃபுட் ஸ்ட்ரீட் போன்ற அதன் பல்வேறு விற்பனை அமையவிடங்களிலும் வாங்கலாம்.

OMR Food Street launches HP Gas Appu

Launch of HP Gas APPU by OMR Food street (3)

அஜித்தால் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற தக்‌ஷா குழு

அஜித்தால் தமிழக அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற தக்‌ஷா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith in daksha teamபல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் அவரது பெயரிலும் ஒரு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு வழங்கப்படும்.

8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் அந்த ‘அப்துல் கலாம்’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.

72-வது சுதந்திர தினத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவுக்கு இந்த ஆண்டு அப்துல் கலாம் விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு.

விருது பெறும் இந்த தக்‌ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக உள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ’மெடிக்கல் எக்ஸ் பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அஜித் ஆலோசகராக செயல்படும் குழு முழுவீச்சில் செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-வினோத் இணையும் படம் அமிதாப்பச்சன் படத்தின் ரீமேக்..?

அஜித்-வினோத் இணையும் படம் அமிதாப்பச்சன் படத்தின் ரீமேக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vinothவிஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படமானது அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த பிங்க்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இப்படத்தின் தமிழ் உரிமையைத்தான் போனிகபூர் கைப்பற்றி இருக்கிறாராம்.

குடியரசுத் தலைவர் முதல் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் பிங்க படத்தை முன்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சினிமா விஸ்வரூபத்தை கேட்டால் அரசியல் விஸ்வரூபத்தை சொன்ன கமல்

சினிமா விஸ்வரூபத்தை கேட்டால் அரசியல் விஸ்வரூபத்தை சொன்ன கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan clarifies about Viswaroopam 3 sequelதமிழ் சினிமாவின் விஸ்வரூபத்தை இந்தியாவுக்கு காட்டிய கலைஞர்களில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன்.

இவர் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் அண்மையில் வெளியானது.

ஆனால் முதல் பாகம் அடைந்த வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

விஸ்வரூபம் படத்தின் 1 மற்றும் 2 பாகங்கள் வந்துவிட்டது. எனவே விஸ்வரூபம் 3 வருமா? என கேட்கப்பட்டது.

அதற்கு கமல், சினிமாவில் இல்லை, நிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க போகிறேன் என தெரிவித்தார்.

அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகி விட்ட கமல் விரைவில் அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுக்க உள்ளதை தான் இப்படி சொல்லியிருக்கிறாரோ..?

Kamalhassan clarifies about Viswaroopam 3 sequel

More Articles
Follows