ரிச் கேர்ள் ரைசாவை ரூட் விடும் லுங்கி பையனாக ஹரிஷ் கல்யாண்

ரிச் கேர்ள் ரைசாவை ரூட் விடும் லுங்கி பையனாக ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pyaar Prema Kadhal An Organic Rom Com With Colourful Panacheகண்ணை கவரும் நிறைய வண்ணங்கள், மிகுதியான இசை ஜாலம் என்று ஜொலிக்கும் “பியார் பிரேமா காதல்” எல்லோருடைய மனங்களிலும்,மயக்கும் தருணஙாக நிறைந்திருக்கிறது.

காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் வணிக அரங்கில் இத்தகைய ஆர்வத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா என்ற ஒரு மந்திரக்கோல், அவருக்கு நன்றி.

இது ஹரீஷ் கல்யாண் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து சொன்ன வார்த்தைகள்.

“நிச்சயமாக, “பியார் பிரேமா காதல்” யுவன் ஷங்கர் ராஜா சாரின் சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை என்பதில் சந்தேகமே இல்லை.

அவரது இசை நூலகம் இடைவிடாமல் தனது செயலாற்றலால், காலத்தால் அழியாத இசையுடன் நிரம்பி வழியும் போது, ஒரு படைப்பாளியும் காதல் இசையை அளிக்க விரும்புவார்.

இத்திரைப்படத்தை அவர் தாய்-குழந்தை என்று ஒப்பிடுகிறார். குறிப்பாக அவருடைய பாடல்களை பார்த்த பிறகு, என் வார்த்தைகளை மக்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

ஹரீஷ் தொடர்ந்து கூறும்போது, “யுவன் சார், அது வெறும் இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்பது வியப்புக்குரியதல்ல.

ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தார்.

அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது” என்றார்.

அவரது கதாபாத்திரத்தை பற்றி கூறும்போது, “எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள்.

ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன்” என்றார்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள்.

இயக்குனர் இளன் திறமைகள் பற்றிய நேர்மறையான பேச்சுக்கள் ஏற்கனவே பரவி, ஒவ்வொரு தயாரிப்பாளரின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்.

மணிகுமரன் சங்கரா (எடிட்டிங்), ராஜா பட்டாச்சார்யா (ஒளிப்பதிவு) மற்றும் ஈ. தியாகராஜன் (கலை) ஆகியோர் பியார் பிரேமா காதல் படத்தின் வண்ணமயமான தோற்றத்துக்கு பின்னணியில் இருக்கும் மாய வித்தைக்காரர்கள்.

Pyaar Prema Kadhal An Organic Rom Com With Colourful Panache

Pyaar Prema Kadhal An Organic Rom Com With Colourful Panache

சென்சாரில் கௌதமி அடாவடி; கொதிக்கும் *சிவா மனசுல புஷ்பா* இயக்குனர்

சென்சாரில் கௌதமி அடாவடி; கொதிக்கும் *சிவா மனசுல புஷ்பா* இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்Siva Manasula Pushpa producer Varahi clash issue with Gautami and Censor Boardரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது.

ஆம்.. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

வேறு யாரும் இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.. டைட்டிலை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான்.

இத்தனைக்கும் அழகான தமிழ் பெயர்கள் கொண்ட டைட்டில் தான்.. அப்படி இருக்க சிக்கல் உருவானது எப்படி..?

இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கியது உண்மைதான்.

ஆனால் இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது படத்தை பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். சில வார்த்தைகளை மியூட் பண்ண சொன்னார்கள்.

ஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி உத்தரவு வந்தது..

இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தார் வாராகி. அதையடுத்து இரண்டு தினங்களுக்குமுன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கௌதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் . இந்தப்படத்தை பார்த்தார்கள்.

படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கௌதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்..

இயக்குனர் வாராகி, கௌதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறியுள்ளார் கௌதமி.

மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம்.

அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

“கௌதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கௌதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது.

சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள்.. நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கௌதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.

அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது.

இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கௌதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை.

இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கௌதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

சினிமாவில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேறு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. சென்சார் போர்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கதையை கதையாகத்தான் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு கேரக்டரையும் இவர் அவராக இருப்பாரோ என தாங்களாக நினைத்துக்கொண்டு தங்களது சொந்தக்கருத்தை முன்வைத்து சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால் அது சினிமாவின் அழிவுக்குத்தான் வித்திடும்.

சினிமா உலகத்தில் இருந்துகொண்டே நடிகை கௌதமியும் இப்படி செய்வதுதான் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” என்கிறார் வாராகி.

இதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான வாராகி.

Siva Manasula Pushpa producer Varahi clash issue with Gautami and Censor Board

ஒரே நேரத்தில் 4 படங்கள்; *ராக்கெட்* வேகத்தில் அசோக் ரங்கநாதன்

ஒரே நேரத்தில் 4 படங்கள்; *ராக்கெட்* வேகத்தில் அசோக் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok renganathanக்யூ சினிமாஸ் சார்பில் அஷோக் ரங்கநாதன் மூன்று படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ராக்கெட் என்ற படத்தை எழுதி இயக்கி தயாரித்து அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

பிரபு கிருத்திகா ஜெயப்பிரகாஷ் கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்ததாக பிரபல ஹீரோ, ஹீரோயின், முன்னனி நடிகர் நடிகையரை வைத்து எழுதி இயக்கி தயாரிக்கிறார்.

மற்றொரு படத்தை இயக்குனர் வேலுப்பிரபாகரன் உதவி இயக்குனர் அகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இதில் நடிக்க இந்திய அளவில் இருக்கும் ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. நிச்சயம் இப்படம் பேசப்படும்.

கதையை கேட்ட மாத்திரமே படம் பண்ண முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து, ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க திட்டமிடப்படுகிறது.

இதற்கிடையே பூர்ணா, கிஷோர், “தீரன் அதிகாரம் ஒன்று” வில்லன் அபிமன்யூ சிங் மற்றும் பலர் நடித்த “குந்தி” என்ற மொழி மாற்று படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்; #நண்பேன்டா

சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்; #நண்பேன்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh and skஇயக்குநர் பொன்ராம்-சிவகார்த்திகேயேன்-சூரி ஆகியோர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் சீமராஜா.

இந்த திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நெப்போலியன், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இசை வெளியீட்டு விழா கடந்த 3 ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே நாளில் சீமராஜா படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதே நாளில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் திட்டம் போட தெரியல என்ற பாடல் வெளியாக இருப்பதாக படக் குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத்…

“இன்று (ஆகஸ்ட் 3) என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் திட்டம் போடத் தெரியல பாடலும் வெளியாகிவிட்டது.

Breaking முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி

Breaking முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sk and hiphop tamizhaசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாகிறது.

இதனையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனையடுத்து தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றன்ர.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரை தற்போது அறிவித்துள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

விஜய்சேதுபதிக்கு ஆத்ம திருப்தி கொடுத்த *மேற்குத் தொடர்ச்சி மலை*

விஜய்சேதுபதிக்கு ஆத்ம திருப்தி கொடுத்த *மேற்குத் தொடர்ச்சி மலை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi talks about his production Merku Thodarchi Malai movieநடிகர் விஜய்சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.

இதில் தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் விஜய் சேதுபதி, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது… “இந்த படம் எளிய மக்களுக்கான படம். ரொம்ப அழகா வந்திருக்கு, என்னை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி படம் செய்ததில்லை. ஆத்ம திருப்தியோடு இருக்கிறேன்.

இந்த படத்தின் கதையை கேட்டு இசையமைத்து கொடுத்த இசைஞானி இளையராஜாவிற்கு நன்றி. படம் உங்களிடம் நிறைய பேசும்” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi talks about his production Merku Thodarchi Malai movie

More Articles
Follows