ஹரிஷ் கல்யாண் அதுல்யா ஜோடியை இணைக்கும் அறிமுக இயக்குனர்

ஹரிஷ் கல்யாண் அதுல்யா ஜோடியை இணைக்கும் அறிமுக இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரீஷ் கல்யாண்.

இவர் இளம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுடன் நடித்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன.

ஹரீஸ் நடிப்பில் ஸ்டார், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

இந்த நிலையில் ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘கனா’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்தாவாகவும் பணி புரிந்தவர் தமிழரசன் பச்சமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களும் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணின் மற்றொரு புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அதுல்யா.

இந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Harish Kalyan – Athulya Ravi joins for a new film

டைரக்டருக்கு லெக்சஸ் கார்.. 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்.; தயாரிப்பாளர் கமலின் தாராள மனசு

டைரக்டருக்கு லெக்சஸ் கார்.. 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்.; தயாரிப்பாளர் கமலின் தாராள மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் எங்கு திரும்பினாலும் ‘விக்ரம்’ படம் குறித்த பேச்சு எதிரொலிக்கிறது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்த படம் வெளியானது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் வெறித்தனமான ஒரு வெற்றியை தன் தீவிர ரசிகர் இயக்குனர் லோகேஷ் மூலம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ‘விக்ரம்’ வெற்றி வாகை சூடியுள்ளது.

எனவே ஒவ்வொரு மொழி ரசிகர்களுக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

தமிழில் பேசிய வீடியோவில்…

‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் ஒருபோதும் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம்.

கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம்.

லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் காதல், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை உலகளவில் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காஸ்ட்லியான LEXUS காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன்.

லோகேஷுக்கு காஸ்ட்லி காரை கிப்ட்டாக கொடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்

இந்த செய்தியை நாம் நேற்று நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.

இத்துடன் 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்குகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் என்பதால் இந்த படம் மூலம் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lexus car for director .. Apache bike for 13 assistant directors .; Producer Kamal’s generous mind

யார் யார் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தால்..; சிவகார்த்திகேயன் பட மேடையில் உதயநிதி பேச்சு

யார் யார் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தால்..; சிவகார்த்திகேயன் பட மேடையில் உதயநிதி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த படம் ‘டான்’.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை ஒட்டி சென்னையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன், படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி.

‘டான் படத்தில் அப்பா- மகன் உறவை நெகிழ்ச்சியாக கூறியதால் இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று படம் பார்த்ததும் அன்றே சொன்னேன். அது நடந்திருக்கிறது.

படம் வெற்றி பெற்றுவிட்டதால், சில உண்மைகளை சொல்கிறேன்.

‘சிவகார்த்திகேயன் அவர்களே.. இந்தப் படம் வேற ஒரு ஹீரோ கதைகேட்டு நிராகரித்தப் படம். அந்த ஹீரோ யாருன்னு தெரியுமா?’ அது நான்தான்.

எனக்கு கதை பிடித்திருந்தது. இருந்தாலும் நான் வேண்டாம் என்று சொல்லிட்டேன்.

காரணம், இதில் பள்ளி மாணவராக நடிக்க வேண்டி இருந்தது. அதில் என்னால் நடித்திருக்க முடியாது. அதனால் நான் நடிக்கவில்லை.

அதேபோல படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையும் என்னால் சரிவர செய்திருக்க முடியாது. யார், யார் எதை செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அது சரியாக அமைந்துள்ளது” என்று பேசினார் உதயநிதி.

Udhayanithi speech on Sivakarthikeyan’s Don film success event

O2 கதையில் நடிக்க நயன்தாரா முடிவெடுத்தது பெரிய விஷயம்.. – தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு

O2 கதையில் நடிக்க நயன்தாரா முடிவெடுத்தது பெரிய விஷயம்.. – தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது.

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பஸ்ஸில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான் “O2”.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார்.

இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்னேஷ் GS. பல கதைகள் எழுதினாலும், இயற்கையின் மீதான ஆர்வத்தாலும், மானுடம் மீதான அக்கறையாலும் ஆக்ஸிஜன் பின்னணியில் இந்தக் கதையினை உருவாக்கியுள்ளார்.

Nayanthara starrer O2 official Trailer

ஓ2 கதையினை கேட்டவுடனே நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷை பாராட்டி, உடனடியாக இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தந்துள்ளார்.

மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்தக் கதையினைக் கேட்டுவிட்டு புதுமையான களமாக இருந்ததால் உடனடியாக தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இப்படத்தின் 70%-க்கும் மேலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே நடப்பதாக இருக்கும்.

இதற்கு தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளும் மிக சவாலானதாக அமைந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தும் படைப்பாக இருக்கும்.

இத்திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி பிரத்யேகமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

பாடலாசிரியர் ராஜேஷ் ஓம்பிரசாத் கூறியதாவது…

பாடலாசிரியராக முதல் முறை உங்கள் முன் நிற்கிறேன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் நான் அறிமுகமாவது எனக்கு மகிழ்ச்சி. எனது நண்பன் இசையமைப்பாளர் விஷால், இயக்குனர் விக்னேஷ் ஆகியோருக்கு நன்றி. எனக்கு பிடித்தமான நயன்தாரா மேடமுடைய படத்தில் முதல் பாடல் எழுதுவது மகிழ்ச்சி. எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் அர்ஜுனன் கூறியதாவது…

இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் ஜாலியான ஒன்று. பேருந்து காட்சிகளை எடுக்கும் போது, நாங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தோம், மிகுந்த சிக்கல்களுக்கிடையில் ஒரு செட்டில் வைத்து ஒரு நல்ல படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விக்னேஷ். குழந்தை நடிகர் ரித்விக் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி

நடிகர் ரிஷிகாந்த் கூறியதாவது…

இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் பலருக்கு நன்றி கூற வேண்டும். நீங்கள் படத்தை பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். குட்டிபையன் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இயக்குனர் மற்றும் நடிகர் பரத் நீலகண்டன் கூறியதாவது..

இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் ஸ்டண்ட் இயக்குனர் தான். நான் இயக்குநராக அறிமுகமான பின் நடிகராக போய் நிற்பது புதுமையாக இருந்தது. நயன்தாரா முன் நான் நடித்தது வித்தியாசமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி. இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். படத்தின் செட் அமைப்பு அட்டகாசமாக இருந்தது. என்னுடன் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ் கூறியதாவது…

இயக்குனர் முதல் முறை எனக்கு கதையை கூறிய போது எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. சவால் நிறைந்த ஒரு கதையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் படத்தை மேம்படுத்தி கொண்டே இருந்தனர். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிரத்தை எடுத்து நடித்துள்ளனர். கலை இயக்குநரின் பங்கு, எங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் பணி அபாரமானது. எல்லோருக்கும் எனது நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.

கலை இயக்குனர் சதீஷ்குமார் கூறியதாவது..

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். இந்த படத்திற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும், தங்களது ஒட்டுமொத்த அர்பணிப்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளனர். இந்த படம் பண்ணும் போது, விக்ரம் பட வேலைகளும் போய்க்கொண்டிருந்தது. அதற்கு எனக்கு உதவியாக இருந்தது என் உதவியாளர்கள் தான். விக்ரம் படத்திற்கு கொடுத்த உழைப்பை தான் இந்த படத்திற்கும் கொடுத்துள்ளோம். படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

எடிட்டர் செல்வா RK கூறியதாவது…

இந்த படம் எனக்கு ஸ்பெஷலான படம். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனது நெடுங்கால நண்பர்கள். நாங்கள் எப்போதும் ஒரே டீம் தான். இந்த படத்தின் முதுகெலும்பு S.R.பிரபு சார் தான். அவர் கொடுத்த பரிந்துரைகள் எங்களுக்கு உதவியாக இருந்தது. தங்க பிரபாகரன் அவர்கள் இந்த படத்திற்கு கொடுத்த பங்கு, இந்த படத்தை மேலும் வலுவாக்கியது.

நயன்தாரா மேடம் இந்த படத்தில் நடித்தது பெரிய விஷயம், அவர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படம் ஒரே இடத்தில் நடப்பதால், பெரிய உழைப்பை எங்கள் குழு கொடுத்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது…

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் தான் படத்தின் இசை சிறப்பாக வர காரணம். நயன்தாரா தான் படத்தின் ஆக்சிஜன். ரித்விக் மற்றும் பரத் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இந்த குழுவுடன் பணிபுரிவது பெருமையான விஷயம். இயக்குனர் சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளார். எடிட்டரின் பணியை பார்த்தபின் நான் அவரது ரசிகர் ஆகிவிட்டேன். படத்தின் சுவாரஸ்யதிற்கேற்ப இசையமைத்துள்ளோம். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் கூறியதாவது…

எங்களது குறும்படத்திற்கு கெஸ்ட் ஆக வரும் பிரபு சார் உடன் நாங்கள் இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷமான அனுபவம். படத்தின் கதையை எனக்கு கூறிய போது, இது சவாலான ஒன்றாக இருக்கும் என எனக்கு தெரியும். அதற்கு பலர் உழைத்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடைய படங்கள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும்.

அந்த வகையில் எங்கள் படமும் அப்படி இருக்கும் என நம்புகிறோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படப்பிடிப்பு சவாலான ஒன்று. நாங்கள் செய்யும் சோதனை முயற்சிகளுக்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நயன்தாரா அவர்களுக்கு நன்றி. மிகவும் ஈடுபாட்டுடன் இந்த திரைப்படம் எடுத்துள்ளோம். நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

குழந்தை நட்சத்திரம் ரித்விக் கூறியதாவது…

என் முதல் படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குனர் விக்னேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் தமிழ் அவர்களுக்கு நன்றி. நயன்தாரா மேடம் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

இயக்குனர் விக்னேஷ் GS கூறியதாவது…

இந்த கதையை குறுகிய காலத்தில் முடிக்க காரணம் தயாரிப்பாளர் தான். இந்த கதையை உள்வாங்கி அதற்கேற்ற வகையில் ஆக்‌சன் இயக்குநர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் தமிழ் இந்த படத்திற்கு பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். படம் சிறப்பாக மாற காரணம் எடிட்டர்.

இந்த கதை வித்தியாசமான ஒன்று. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது தயாரிப்பாளர்கள் தான். நயன்தாரா மேடம் சிறப்பான நடிகை, அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் என் மேல் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தின் ஆக்சிஜன். இந்த படம் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டது. இந்த படம் வலிமையான பெண்களுக்கு சமர்ப்பணம். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் SR பிரபு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கூறியதாவது…

பிரியாணி படத்தின் போதே ஒளிப்பதிவாளர் தமிழ் எனக்கு தெரியும். அவர்தான் இயக்குநரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு தேடல் இந்த கதையில் இருந்தது. படம் எடுக்கலாம் என முடிவெடுத்த பின் இயக்குனர் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டார். அதற்கு நயன்தாரா அவர்களும் ஒத்துகொண்டார். அவர் இதுபோன்ற கதையில் நடிக்க முடிவெடுத்தது பெரிய விஷயம்.

இந்த படத்தின் கதையை கேட்டபோதே கலை இயக்குனர் சதீஷ் தான் சரியாக இருப்பார் என முடிவெடுத்தோம். அவரும் நல்ல பணியை செய்து கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் இயக்குநர் நண்பர் என்பதற்காக பெரிய உழைப்பை போட்டுள்ளனர். இந்த படத்தின் கதையை ஒட்டி இசையை சிறப்பாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர். குறைந்த நடிகர்கள் இருக்கும் இந்த கதையில், சிறப்பான ஆட்களையே தேடி தேடி போட்டுள்ளோம். இந்த படம் எங்களுக்கு திருப்திகரமாக வந்துள்ளது.

இந்த படம் ஒடிடியில் வருவது நாங்கள் முன்னரே முடிவெடுத்த விஷயம். இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும். படம் பார்த்து நீங்கள் ஆதரவு தர வேண்டும். நன்றி.

Nayanthara’s decision to act in O2 story is a big deal .. – Producer SR. Prabhu

லோகேஷுக்கு காஸ்ட்லி காரை கிப்ட்டாக கொடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்

லோகேஷுக்கு காஸ்ட்லி காரை கிப்ட்டாக கொடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

கமல்ஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, நரேன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைத்த இப்படத்தில் முக்கிய கேரக்டரில் (ரோலக்‌ஸ்) சூர்யா நடித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி தமிழக அரசு அளித்திருந்தது.

‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.49 கோடி வசூலை எட்டியது என்பதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது, படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை ‘விக்ரம்’ படம் அள்ளும் என வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் லெக்சஸ் என்ற காஸ்ட்லி காரை பரிசளித்துள்ளார்.

லெக்சஸ் LEXUS காஸ்ட்லி கார் வகைகள் ரூ 50 லட்சம் முதல் 1 கோடி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Kamal Haasan gifted a Costly car to Lokesh Kanagaraj

கமலின் கொண்டாட்டம்.. ரோலக்ஸை பார்க்க பயம்.. லோகேஷின் ரசிக மனப்பான்மை..- கார்த்தி கருத்து

கமலின் கொண்டாட்டம்.. ரோலக்ஸை பார்க்க பயம்.. லோகேஷின் ரசிக மனப்பான்மை..- கார்த்தி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்களும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கார்த்தி ‘விக்ரம்’ படம் குறித்த தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்… ”அனைவரும் குறிப்பிட்டது போல் ‘விக்ரம்’ திரைப்படம் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

ஆக்‌ஷனும் காட்சியமைப்பும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்தது.

பஹத் பாசில் தனது சிறந்த நடிப்பை கைவிடவில்லை. விஜய்சேதுபதி தன்னுடைய நெகட்டிவ் கேரக்டரில் புதிய நிழலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அனிருத் இசையில் மிரட்டியிருக்கிறார்.

இறுதியாக… ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது. லோகேஷ் உங்கள் ரசிக மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார் கார்த்தி.

Kamal’s celebration .. Fear to see Rolex .. Lokesh’s fan attitude ..- Karthi comment

More Articles
Follows