ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்-மாகாபா. ஆனந்த்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்-மாகாபா. ஆனந்த்

Harish Kalyan teams up with MaKaPa Aanad in Ranjith Jeyakodi directionஇளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.

ஹரிஷ் கல்யாண் தனது சமீபத்திய வெற்றிப்படமான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தனது அழகிய தோற்றம் மற்றும் நடிப்புக்காக மூலை முடுக்கெல்லாம் பாராட்டையும், அன்பையும் பெற்றிருக்கின்றார்.

வேறு எந்த நடிகரும் இந்த நிலையை அடைந்திருந்தால் அதே வழியில் பயணிக்க விரும்புவர். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார்.

ஆம், புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய விஷயம் தான் இது. நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது…

“ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும்.

ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.

மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்தில் இசை விருந்து வைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது.

மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

Harish Kalyan teams up with MaKaPa Aanad in Ranjith Jeyakodi direction

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையாளிகளுக்கு ரஜினி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையாளிகளுக்கு ரஜினி நிதியுதவி

கேரளாவில் கடந்த பல நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலரும் கேரளாவுக்கு உதவி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.

மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய், நயன்தாரா 10 லட்ச ரூபாய், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rajinikanth donates Rs 15lakhs to Kerala flood relief

டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாரா; ஆச்சரியத்தில் கோலிவுட்

டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாரா; ஆச்சரியத்தில் கோலிவுட்

Nayantharas Kolamavu Kokila special show at early morningதென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.

என்னதான் இவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றாலும், இவரின் படங்களுக்கு மட்டும் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது.

படத்தில் நாயகனே இல்லாவிட்டாலும் நயன்தாரா இருக்கிறாரே அது போதும் என ரசிகர்களும் சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

அறம், டோரா ஆகிய படங்களில் இவரே முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படத்திலும் இது தொடர்ந்துள்ளது.

பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும்தான் அதிகாலை, காலை சிறப்பு காட்சிகள் இருக்கும்.
தற்போது அந்த பெருமை நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.

கோலமாவு கோகிலா தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சில தியேட்டர்களில் காலை சிறப்புக் காட்சி நடைபெற்றுள்ளது.

இதனால் கோலிவுட்டே நயன்தாராவை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.

Nayantharas Kolamavu Kokila special show at early morning

சண்டக்கோழி2 சிங்கிள் ட்ராக்கை ஆகஸ்ட் 20ல் வெளியிடும் விஷால்

சண்டக்கோழி2 சிங்கிள் ட்ராக்கை ஆகஸ்ட் 20ல் வெளியிடும் விஷால்

Sandakozhi 2 first single track from August 20விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி.

இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது.

பிளாக்பஸ்டர் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஷால், இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இது உள்ளது. சண்டக்கோழி 2 டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்கோழி 2 முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.

Sandakozhi 2 first single track from August 20

60 வயது மாநிறம் படத்துக்கு யு சர்ட்டிபிகேட்; ஆகஸ்ட் 31ல் ரிலீஸ்

60 வயது மாநிறம் படத்துக்கு யு சர்ட்டிபிகேட்; ஆகஸ்ட் 31ல் ரிலீஸ்

Vikram Prabhus 60 Vayadu Maaniram Censored U and Release on 31st Augustகலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது.

இப்படத்திற்கு சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

இப்படத்தின் முழு சூட்டிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளை முடித்துவிட்டே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabhus 60 Vayadu Maaniram Censored U and Release on 31st August

*மேயாத மான்* இந்துஜாவுடன் துருவா இணையும் *சூப்பர் டூப்பர்*

*மேயாத மான்* இந்துஜாவுடன் துருவா இணையும் *சூப்பர் டூப்பர்*

Dhruva and Indhuja starring Super Duper movie newsதுருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்” இன்று பூஜையுடன் ஆரம்பம்.

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர் டூப்பர்”. இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை இயக்கும் ஏகே அதாவது அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது ‘லேகா’ பரவலான கவனம் பெற்ற படமாகும் .

படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’, ‘பூமராங்’, ‘அறுபது வயது மாநிறம்’ படங்களின் நாயகி .

படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும் போது , ” இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார்.

இவர் ‘மீசையை முறுக்கு’, ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ , படங்களில் நடித்தவர் . அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர்.

இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள் ” என்கிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் சுந்தர்ராம் கிருஷ்ணன் , இசையமைப்பவர் திவாகரா தியாகராஜன். படத்தொகுப்பு வேல் முருகன், கலை இயக்கம் சூர்யா.

இன்று தொடங்கி படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது “சூப்பர் டூப்பர்” படக்குழு.

Dhruva and Indhuja starring Super Duper movie news

super duper

More Articles
Follows