மீண்டும் இணையும் *பியார் பிரேமா காதல்* கூட்டணி

மீண்டும் இணையும் *பியார் பிரேமா காதல்* கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ppkபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’.

அறிமுக இயக்குனர் இளன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது.

எனவே இதன் இயக்குனருக்கு யுவன் ஒரு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

தற்போது மீண்டும் அவர் இயக்க இருக்கும் புதிய படத்தை யுவனே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

எனவே இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்படுகிறது.

மீண்டும் சிக்கல்; சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய கோர்ட் எச்சரிக்கை

மீண்டும் சிக்கல்; சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய கோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuசிம்பு என்றாலே அவரை பற்றிய சர்ச்சைகள் வந்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் அவர் தன் வழியில் சென்றுக் கொண்டே இருப்பார். தற்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு, சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

அதற்காக சிம்புவிடம் ரூ.50 லட்சத்தை அட்வான்ஸாக கொடுத்திருந்தாம்.

ஆனால் அந்த நிறுவனத்திற்கு நடிக்க இதுநாள் வரை தேதிகள் ஒதுக்கவில்லையாம் சிம்பு.

இதனையடுத்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே சிம்பு பணத்தை திருப்பி தர உத்தரவாதம் அளிக்க வேண்டும், இல்லையேல் சிம்புவின் கார், செல்போன் போன்றவை ஜப்தி செய்யப்படும் என கோர்ட் எச்சரித்து, நான்கு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சொன்னபடி சிம்பு செய்யவில்லை.

இந்த வழக்கு இன்று (அக்., 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்., 31-ம் தேதிக்குள், பேஷன் மூவி நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.85 லட்சம் பணத்தை திருப்பி தர, சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இல்லையேல், அவரின் வீட்டு உபயோக பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என கோர்ட் எச்சரித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய தங்க மீன்கள் சாதனாவுக்கு *டயானா விருது*

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய தங்க மீன்கள் சாதனாவுக்கு *டயானா விருது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sadhanaராம் இயக்கி, நடித்த தங்கமீன்கள் படத்தில் அவரின் மகள் செல்லம்மா கேரக்டரில் நடித்தவர் பேபி சாதனா.

இவர் தற்போது கொஞ்சம் வளர்ந்து மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் மாற்றுதிறனாளியாக நடித்துள்ளார்.

இதில் மம்முட்டி, அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

துபாய் நாட்டில் வசித்து வரும் சாதனா, நடிப்போடு படிப்பையும் தொடர்ந்து வருகிறார்.

மேலும் சில சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

துபாயில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் ஸ்பீச் தெரப்பி, நடனம் போன்ற கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.

இவரின் சேவையை பாராட்டும் வகையில் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் அக்கௌண்டை தொடங்கிய தனுஷ்

இன்ஸ்டாகிராமிலும் அக்கௌண்டை தொடங்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennai dhanushதமிழக கதாநாயர்களிலேயே இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ்.

தற்போது தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் என கோலிவுட்டில் கலக்கி வருகிறார். மேலும் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் ட்விட்டர், பேஸ்புக்கில் தன் பட தகவல்கள் பகிர்ந்து வருகிறார்.

ட்விட்டரில் அதிகமான பாலோயர்களை கொண்ட தமிழ் நடிகர் இவர் மட்டுமே.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமிலும் தனுஷ் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார்.

இரு வேடங்களில் நயன்தாரா கலக்கும் *ஐரா*; யோகிபாபு உடன் கூட்டணி!

இரு வேடங்களில் நயன்தாரா கலக்கும் *ஐரா*; யோகிபாபு உடன் கூட்டணி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

airaa posterரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

“அறம்” படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்” திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, “அவள்” படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

” நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து “ஐரா” படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.

“ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு horror படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.

முகத்தில் ரத்தம் வழிய மன்சூர் அலிகானின் 3வது மனைவி போலீசில் புகார்; தாக்கியது 2வது மனைவி

முகத்தில் ரத்தம் வழிய மன்சூர் அலிகானின் 3வது மனைவி போலீசில் புகார்; தாக்கியது 2வது மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khanநடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர்.

இதில் 2வது மனைவி பேபி என்கிறவர் 3வது மனைவியை தாக்கியதாக கூறப்படகிறது.

2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் மற்றும் மகன் மீரான் அலிகான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கி உள்ளனர்.

மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலை மன்சூர் அலிகான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்டுள்ள 3வது மனைவி வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குடும்பத்தார் மீது புகார் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

More Articles
Follows