தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை சித்தி இதானி.
மும்பையைச் சேர்ந்த இவர் ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் சிம்புவுடன் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. இதில் இவர் தன் சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார்.
தற்போது தனுஷ் உடன் இணைந்து டூயட் பாட இருக்கிறார் சித்தி இதனை.
இளன் இயக்கும் புதிய படத்தில் இவர் நாயகியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘கிரகணம்’ & ‘பியார் பிரேமா காதல்’ படங்களை இயக்கியவர் இளன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாத்தி, கேப்டன் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் 2, வட சென்னை 2 உள்ளிட்ட படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
VTK fame Siddhi Idhani will pair with Dhanush