‘என்னை சந்திக்க வருபவர்களிடம் அரசியல்தான் பேசினேன்…’ ரஜினி

‘என்னை சந்திக்க வருபவர்களிடம் அரசியல்தான் பேசினேன்…’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthதமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசியதுமே பல்வேறு விவாதங்கள் கிளம்பிவிட்டன.

இதனிடையே காலா சூட்டிங்கில் கலந்து கொண்டு ரஜினி சென்னை வந்ததும், அவரை தினசரி ஏதாவது ஒரு பிரபலம் சந்தித்து வருகிறார்.

தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் காலா சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மும்பை செல்லவிருந்தார் ரஜினி.

அப்போது சென்னை விமான நிலையத்திற்கு அவர் வர, அரசியல் பிரவேசம் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

“நான் அரசியலுக்கு வந்தால் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்.

என் நண்பர்களுடன் என்னை சந்திக்க வருபவர்களுடன் நான் அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை.

அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆனால், முடிவு செய்யவில்லை.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.” என்றார்.

AAA படத்திற்கு தடை நீங்கியது: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

AAA படத்திற்கு தடை நீங்கியது: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras HC refuses to stay Simbu film AAAசிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA).
இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

இதற்காக பைனான்ஷியர் ரமேஷ் என்பவரிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை திருப்பி தராததால் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டு இருந்தது.

தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்கும் வரை படத்தை வெளியிட கூடாது என ரமேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, கடன் தொகைக்கு ஈடாக வங்கி உத்தரவாதத்தையும், ஆதம்பாக்கத்திலுள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துபத்திரத்தையும் அளிப்பதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, AAA படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Madras HC refuses to stay Simbu film AAA

விவேகம்-மெர்சல் படத்திற்கு இப்படியொரு கனெக்ஷனா?

விவேகம்-மெர்சல் படத்திற்கு இப்படியொரு கனெக்ஷனா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vivegamஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் மெர்சல் படத்தில் போஸ்டர்களும் வெளியாகின.

இந்த படத்தின் போஸ்டர்கள் எவ்வளவு ரீட்வீட் ஆகியிருக்கிறது என்பது வரை தற்போது போட்டி ஆரம்பமாகிவிட்டது.

இனி இதுவும் யூடியுப் சாதனை போன்று விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா என்ற ஒரே டிசைனர்தானாம்.

தெறி, கத்தி ஆகிய படங்களின் போஸ்டரையும் வடிவமைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The connection between Vivegam and Mersal posters

இளைய தளபதிக்கு வயதாகிவிட்டதா..? ஏன் தளபதி மட்டும்?

இளைய தளபதிக்கு வயதாகிவிட்டதா..? ஏன் தளபதி மட்டும்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy vijayநடிகர் விஜய்யை இளைய தளபதி என ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

ஆனால் நேற்று வெளியான மெர்சல் படப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால் ரசிகர்களிடையே சில விவாதங்கள் நடைபெற்றது.

விஜய்க்கு 40 வயதை கடந்து விட்டதால் இளைய என்ற வார்த்தையை நீக்கி விட்டார்களா? எனவும் பேசிக் கொண்டனர்.

எங்க தளபதி எப்பவும் சின்ன பையன் போலத்தான் இருக்காரு.

காலேஜ் ஸ்டூடண்டா கூட இப்பவும் நடிப்பாரு. ஒருவேளை சார்ட்டா கூப்பிட தளபதி வச்சிருப்பாங்க.

இப்ப அதானே ஃபேஷன் என்கிறார்கள் சில ரசிகர்கள்.

அட்லி ஏன் மாத்தினாரு தெரியலையே..??

காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஞ்சித் இயக்கும் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

தற்போது தன்னை தேடி வரும் சில பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி மீண்டும் ‘காலா’ பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார்.

இதனையடுத்து அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருக்கிறாராம்.

மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளத்தான் அங்கு செல்கிறாராம்.

அதன் பின்னர் ஜூலை 13ம் தேதி ரஜினி சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.

பார்வையற்றவர்களை பறக்க வைத்து மகிழும் ‘மைம்’ கோபி

பார்வையற்றவர்களை பறக்க வைத்து மகிழும் ‘மைம்’ கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mime Gopiகபாலி, உரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மைம் கோபி.

இவர் பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார்.

மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக் இதற்காக மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார்.

ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து நல்ல உணவு விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மைம் கோபி கூறுகையில்…

“போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துசெல்கிறோம். மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை.

நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்” என்றார்.

சென்னை விமான நிலையத்தில் பார்வையற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்ப நடிகர் ராமகிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Articles
Follows