எம்ஜிஆர்-ரஜினி ரூட்டில் செல்கிறாரா சிவகார்த்திகேயன்.?

DjAnnJHU4AA9atQகுறுகிய காலத்தில் தன் அயராத உழைப்பால் முன்னணி நடிகராக உருவெடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழகமெங்கும் உள்ளனர்.

இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சீமராஜா.

இதில் இடம் பெற்றுள்ள வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை இப்பட இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார்.

இப்பாடலை யுகபாரதி எழுத, திவாகர் மற்றும் கவிதா கோபி இருவரும் பாடியுள்ளனர்.

இந்த பாடல் வரிகளில்…

சிவகார்த்திகேயன் தன் புகழ் பாடுவதாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் எம்ஜிஆர், ரஜினி ஆகிய பெரிய நடிகர்களுக்குத்தான் இதுபோன்ற பாடல் வரிகள் அமைந்துள்ளது.

எம்ஜிஆருக்கு கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் அதுபோன்ற பாடல்களை எழுதியிருந்தனர்.

அதுபோல் ரஜினிக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

அந்த பாடலின் சில வரிகள் இதோ….

நெருப்பான நெல்லையிலே பொறுப்பான மன்னன்டா…
ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் அண்ணன்டா… எனறு பாடல் தொடங்குகிறது.

எம் பேர கேட்க கூடும் அரங்கு அரங்கு…
நான் ஏழைக்கு ஏத்த ஏரோப்ளேனு.. நீ ஒதுங்கு… ஒதுங்கு…

ஊரெல்லாம் எம் படத்த போட்ட ஆகும் டிரெண்டு
நா வாலில்லா பட்டாம்பூச்சி எல்லாருக்கும் ப்ரெண்டு

கால வார 100 பேரு.. ஷேப்பாஃ நீயும் கேம் ஆடு…

என்ற தத்துவ வரிகள் இதில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

Whether Sivakarthikeyan started to follow MGR and Rajini route?

Overall Rating : Not available

Latest Post