தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா திரைப்படம் கடந்த ஜீன் 7ஆம் தேதி வெளியானது.
இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளன்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விவேக், காலா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும்,’ ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது ’ என தெரிவித்துள்ளார்.
காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது. @rajinikanth @dhanushkraja
— Vivekh actor (@Actor_Vivek)