தமிழ் சினிமாவில் கபாலிக்கு அடுத்த இடத்தில் விவேகம்

தமிழ் சினிமாவில் கபாலிக்கு அடுத்த இடத்தில் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali teaser Vivegam teaserஅஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாக காரணம் இதன் டீசர் என்பது நாம் அறிந்ததே.

இதன் டீசர் மே 11ஆம் தேதி நள்ளிரவில் வெளியாகி தென்னிந்தியளவில் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது யூடிப்பில் 40 லட்சம் லைக்ஸை பெற்று, சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு ரஜினியின் கபாலி டீசர் மட்டும்தான் தமிழ் சினிமாவில் 40 லட்சம் லைக்ஸை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vivegam teaser reached 400K likes in YouTube after Kabali Teaser

‘நடிகராக நடந்து கொள்ளவில்லை சிம்பு ’ – லட்சுமி ராமகிருஷ்ணன்

‘நடிகராக நடந்து கொள்ளவில்லை சிம்பு ’ – லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu talks to me not as Star says Lakshmi Ramakrishnanநடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன் மனதில் பட்டதை ஓபனாக பேசக்கூடியவர்.

இவர் அண்மையில் சிம்பு, தமன்னா இணைந்துள்ள AAA படத்தின் போஸ்டரை பற்றி தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிம்பு போன் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிம்பு எனக்கு போன் செய்திருந்தார்.

எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். அதோடு பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு அவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன்.

ஒரு நடிகராக அவர் தன்னை காட்டிக் கொள்ளாமல் பேசியிருந்தார்” என்றும் ட்டீட் செய்துள்ளார்.

@iam_str just called me, #straightforwardness, shared each other’s views, requested him, 2 lend support in the war against disrespect4women

Sometimes we just need 2 stand up to get across our point, appreciate @iam_str for picking up the phone & talking 2 me & not playing ‘STAR’

— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 6, 2017

Simbu talks to me not as Star says Lakshmi Ramakrishnan

நேற்று அஜித்; இன்று விஜய்; நாளை விக்ரம்

நேற்று அஜித்; இன்று விஜய்; நாளை விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith vikramஅஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் சூட்டிங் பல்கேரியா (ஐரோப்பா) நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதுபோல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 61 படத்தின் சில காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டதாம்.

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து, விரைவில் சீயான் விக்ரமும் பல்கேரியா (ஐரோப்பா) செல்லவிருக்கிறாராம்.

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அங்கு செல்லவிருக்கிறதாம் படக்குழு.

Vikram going to Bulgaria soon for his Dhruva Natchathiram shoot

சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் தானா சேர்ந்த கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசி3 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசரை வெளியிடுங்கள் என சூர்யா ரசிகர்கள் இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவையும் அதிர வைக்கும் இளையதளபதி

ஆஸ்திரேலியாவையும் அதிர வைக்கும் இளையதளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thuppaki vijayஇளைய தளபதி விஜய்க்கு தமிழக ரசிகர்களிடையே உள்ள மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

அண்மைகாலமாக அது கேரளாவிலும் படுவேகமாக பரவி வருகிறது.

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் விஜய்யின் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா, மெல்போர்னில் உள்ள ஒரு திரையங்கு ஒன்றில் ஜீன் 222ஆம் தேதி இரவு 8 மணிக்கு துப்பாக்கி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாம்.

அதற்கான அறிவிப்பு போஸ்டர்கள் தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

சல்மான்கான் உடன் நடித்தவர் ரஜினியுடன் இணைந்தார்

சல்மான்கான் உடன் நடித்தவர் ரஜினியுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pankaj_Tripathi_ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் ஓரிரு நாட்கள் சென்னை வந்து செல்வார் ரஜினி என கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் கோலிவுட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முக்கிய நடிகர் நானா படேகர் இணைந்துள்ள நிலையில் தற்போது மற்றொரு நடிகரான பங்கஜ் திரிபாதி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறாராம்.

காலாவில் வில்லனாக நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு.. வில்லன் இல்லை. ஆனால் இது ஒரு வித்தியாசமான கேரக்டர்தான்.

இதுவரை ரஜினியின் எந்தவொரு படத்தையும் நான் முழுவதுமாக பார்த்தது இல்லை. ரோபோ (எந்திரன்) படத்தில் கூட சில காட்சிகளைதான் பார்த்தேன்.

ஆனால் ரஜினி எனக்கு ஒரு முன்னோடி போல. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழச்சி.

அவரின் எளிமை மற்றும் நேர்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

சல்மான்கான் நடித்த தபாங்2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் பங்கஜ் திரிபாதி என்பது குறிப்பிடத்தக்கது.

Pankaj Tripathi teams up in The Role Of Cop In Rajinikanths Kaala

More Articles
Follows