தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது…
துப்பறிவாளன் படத்தில் டிடெக்டிவ். இரும்பு திரையில் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன்.
அதில் கோவத்தை வெளிக்காட்டாமல் இருக்கும் கதாப்பாத்திரம், இதில் சமூக பிரச்சனைகளை கோபத்தின் மூலம் வொளிப்படையாக காட்டும் கதாப்பாத்திரம்.
இந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் சந்தித்த கதாப்பாத்திரமாக இருக்கும்.
துப்பறிவாளன் கதாப்பாத்திரத்தை எல்லோருமே பார்த்திருக்க மாட்டோம்.
இரும்புத்திரை உள்ள கதிரவன் கேரக்டர் அனைவருக்கும் நெருக்கமானது.