தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு திரைப்படம் உருவாக கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முக்கிய காரணமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர்கள் தான்.
தற்போது இந்த வரிசையில் இணைந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் வினோத் காந்தி.
இவரது பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை. அங்கு விவசாய குடும்ப பின்னணியில் இருந்து தற்போது திரைத்துறையில் தடம் பதித்து வருகிறார்.
இவரது தந்தை இன்றளவும் தன்னுடைய விவசாய பணியை கைவிடாமல் செய்து கொண்டிருப்பவர். சிறுவயதில் தனது தந்தையின் மூலமாக திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்து திரைத் துறையில் நுழைய வேண்டும் என்ற தன் தந்தையின் கனவையும் சேர்த்து சென்னையை நோக்கி பயணம் செய்திருக்கிறார்.
இவரது ஒளிப்பதிவில் ‘விடியாத இரவு ஒன்று வேண்டும்’ மற்றும் ‘4554’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.
மேலும் சமீபத்தில் வெளியான ‘காடப்புறா கலைக்குழு’ என்ற படத்திற்கும் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி தான். இந்தப் படத்தில் முனீஸ் காந்த் மற்றும் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தற்பொழுதும் சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து திரைத்துறையில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் வினோத் காந்தி.. வாழ்த்துக்கள் ப்ரோ..
Cinematographer Vinoth Gandhi movie updates