ரஜினி மட்டுமா பேசினாரு; கமல்-சிம்பு நானும்தான் பேசினேன்…: விஷால்

ரஜினி மட்டுமா பேசினாரு; கமல்-சிம்பு நானும்தான் பேசினேன்…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal statement on Rajinikanths Kaala release in Karnataka stateகாவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிராகவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால், அவர் நடித்துள்ள ‘காலா’ படத்தைத் கர்நாடகாவில் திரையிடவிட மாட்டோம் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

அத்துடன், கர்நாடக வர்த்தக சபையும் ‘காலா’ படத்தைத் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் கூறியதாவது…

“ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது, தடைசெய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன.

கர்நாடக வர்த்தக சபையைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறோம். நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு. ‘காலா’ படம் ஒருவரால் தயாரிக்கப்பட்டு, அதில் ரஜினி நடித்திருக்கிறார்.

இது திரைப்படம். அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று கர்நாடக வர்த்த சபை என்ன முடிவு எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை, இதுதொடர்பாக நிச்சயம் சந்திப்போம். ‘காலா’ படம் எல்லா இடங்களிலும் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

காவிரிப் பிரச்சினை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் கூடப் பேசியிருக்கிறேன். அது தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தைப் பாதிக்கக்கூடாது.

சினிமாவையும் அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து இருக்கும்.

ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு கிடையாது. புதுமுகங்கள் அரசியலுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில்தான் ரஜினி சார் வருகிறார்.

படம் வெளிவரும்போது, அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே… மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு, அவ்வளவுதான்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில், 13 பேர் இறந்துள்ளனர். கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் இறந்துள்ளனர் என எனக்குத் தெரியும். நானும் ஓட்டு போட்டவன்தான். யார் சுடச் சொன்னது? என்று கேட்டதற்கு, துணை வட்டாட்சியர் என்று சொல்கிறார்கள்.

எஸ்.பி, கலெக்டரையும் இடமாற்றம் செய்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கணக்கில் வந்த 13 பேர் இறந்ததற்கு அந்த ஆலை மூடப்பட்டுவிட்டது. இறந்தவர்கள் பெயர் வரலாற்றில் எழுதப்பட வேண்டும்.

144 தடை போட்டால் முட்டிக்கு கீழேதான் சுட வேண்டும். அது எல்லாருக்குமே தெரிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையாக இருக்கட்டும், நெடுவாசல், ஸ்டெர்லைட் பிரச்சினையா இருக்கட்டும்.

அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கும். இரவு நேரத்தில் 4 பேர் கூடினாலே போலீஸ் வந்து கேட்பார்கள்.

இங்கு லட்சக்கணக்கானோர் கூடியும் தெரியவில்லை என்று கூறுவது முட்டாள்தனம். பிரதமர் வெளிநாடு போகாமல், உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலே சந்தோஷம்தான்.

தமிழ் சினிமாவுக்காகவும் நாங்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம். பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனியுங்கள். நல்லது செய்தால், நான் அவருக்குத்தானே ஓட்டு போடுவேன், நல்லது செய்யாமல் எப்படி ஓட்டு போட முடியும்.

13 பேர் குடும்பத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு தொகையை நாங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.

13 போராளிகளின் குடும்பத்திற்கும் பெரிய இழப்புதான். அவர்களை மறக்கக்கூடாது. வாக்களித்தவனாக பாரதப் பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், நம் நாட்டுப் பிரச்சினையைக் கவனியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Vishal statement on Rajinikanths Kaala release in Karnataka state

Breaking: போராட்டமே கூடாது என ரஜினி சொல்லவில்லை.: ரஞ்சித்

Breaking: போராட்டமே கூடாது என ரஜினி சொல்லவில்லை.: ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ranjith reaction to Rajinikanth statement on Peoples Protestரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.

இதில் காலா திரைப்படம் வருகிற ஜீன் 7ல் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற ஒரு போராட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் பா. ரஞ்சித்.

அப்போது அவரிடம்

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதே துப்பாக்கி சூட்டூக்கு காரணம் என ரஜினிகாந்த் பேசியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு ரஞ்சித் கூறியதாவது…

இன்று காலையில் கூட ரஜினி சாரிடம் பேசினேன்.

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.

தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. நான் இப்போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.” என் கூறினார்.

செய்தியாளர்களை ஏய்… என திட்டிய ரஜினி மன்னிப்பு கேட்க சங்கம் வலியுறுத்தல்

செய்தியாளர்களை ஏய்… என திட்டிய ரஜினி மன்னிப்பு கேட்க சங்கம் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஒருமையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி என்றும், இதற்காக மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் அநாகரிக செயல் என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தவும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Hot Updates: ரஜினியை பார்த்து யார் நீங்க? என்று கேட்டவர் யார் தெரியுமா?

Hot Updates: ரஜினியை பார்த்து யார் நீங்க? என்று கேட்டவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who are You from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospitalதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்.

படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார் ரஜினி.

பின்னர், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.

அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அந்த் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்று கேட்க, “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார்.
“ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என கேட்கிறார்.

“நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று ரஜினி சொன்னதும், `சென்னையிலிருந்து வருவதற்கு 100 நாட்கள் வேண்டுமா? என்கிறார் அவர்.

சரி தம்பி.. என்றபடியே ரஜினி அங்கிருந்து நகர்கிறார்.

தற்போது அந்த இளைஞர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது.

அவர் அப்படி ரஜினியிடம் கேட்க என்ன காரணம் என அறிந்துக் கொண்டதில்…

`தூத்துக்குடியில் நாங்கள் பல நாட்களாக போராடினோம். ரஜினி அப்போது வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இத்தனை நாட்களாக ரஜினி வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை அப்படியே இருந்தால் அவர் வந்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.

போராடத் தெரிந்த எங்களுக்கு வெற்றி பெற முடிந்தது. அதுபோல எங்களைப் பாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் யாருமில்லை. போராட்டத்தில் ஒரு நாளாவது இணைந்து போராடியிருந்தால்தான் அவர் கருத்துச் சொல்லியிருக்கலாம்.

`காலா’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால், அவர் அதற்காக வந்துள்ளார்.

இப்போது நிதியளிக்கிறேன் என்கிறார் அதனால்தான் கோபம் கொண்டு அவரை அப்படி கேட்டேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Who are You? from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospital

Who are You from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospital

 

Big Breaking: எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…: ரஜினி ஆவேசம்

Big Breaking: எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…: ரஜினி ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For each issue protest should not be there says Rajini in angry wayதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரது பேட்டி ஆவேசமாக மாறியது.

தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது.

காவல்துறையினர் சீருடையில் இருக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

போலீசை அடித்தது, ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பை எரித்தது சமூக விரோதிகள்தான்.” என்றார்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துக் கொண்டது எப்படி ரஜினிக்கு தெரியும் என ஒரு நிருபர் கேட்க, எனக்குத் தெரியும். எனக்கு எல்லாம் தெரியும் என்றார்.

ஜல்லிக்கட்டு போராட்ட இறுதியிலும் சமூக விரோதிகள்தான் அதை திசை திருப்பினார்கள்.

ஏன் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கேட்டார். அவரை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

எதற்கு எடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று ஆவேசமாக ரஜினிகாந்த் பேசி விட்டு சென்றார்.

For each issue protest should not be there says Rajini in angry way

ஆர்.கே.சுரேஷின் உறவினரை சாம்பியனாக்கும் சுசீந்திரன்

ஆர்.கே.சுரேஷின் உறவினரை சாம்பியனாக்கும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh nephew Roshan as Champion in Suseenthirans movie‘வெண்ணிலா கபடி குழு“ , “ஜீவா“ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார்.

இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன், R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

RK Suresh nephew Roshan as Champion in Suseenthirans movie

More Articles
Follows