மெகா ரேஸ் தீபாவளி : ரஜினி-சிம்பு-அருண் விஜய் மோதலில் இணைந்த விஷால்-ஆர்யா

மெகா ரேஸ் தீபாவளி : ரஜினி-சிம்பு-அருண் விஜய் மோதலில் இணைந்த விஷால்-ஆர்யா

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

தற்போது இந்த களத்தில் வா டீல் என களம் இறங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வா டீல்’ படத்தை ஹேம்நாத் மோகன் தயாரித்துள்ளார் .

‘வா டீல்’ படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பட ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது 2021 தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் சார்பாக ஜெ. சதீஷ்குமார் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் மற்றொரு படமான ‘எனிமி’ பட ரிலீசையும் தீபாவளி ஸ்பெஷலாக அறிவித்துள்ளனர்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘எனிமி’.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வினோத் தயாரிக்க, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர்.

Vishal and Arya joins the Mega Diwali race

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *