‘சீயான் 62’ குட்டிக் கதை சொல்லி ட்விஸ்ட் வைத்த ‘சித்தா’ இயக்குநர்

‘சீயான் 62’ குட்டிக் கதை சொல்லி ட்விஸ்ட் வைத்த ‘சித்தா’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இயக்குநர் S.U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Chiyaan 62 movie announcement video goes viral

SHAME LESS SATHYA JOTHI தனுஷ் ரசிகர்கள் செய்த டிரென்டிங்.; ஏன்.?

SHAME LESS SATHYA JOTHI தனுஷ் ரசிகர்கள் செய்த டிரென்டிங்.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

ஜி வி பிரகாஷ் இசையமைக்க இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் தனுஷ் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சிவராஜ்குமார், விநாயகன், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதா சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது்

ஆனால் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் எந்த அப்டேட்டையும் படக்குழு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி SHAME LESS SATHYA JOTHI என்ற ஹாஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுக்க அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans trending shameless Sathyajothi

தல பொங்கலை தொடர்ந்து இந்தாண்டிலேயே தல தீபாவளி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

தல பொங்கலை தொடர்ந்து இந்தாண்டிலேயே தல தீபாவளி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் அஜித் நடித்த ‘துணிவு’ படமும் வெளியானது.

இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது.

விஜய் – அஜித் ஆகிய இரு முன்னணி நடிகர்கள் படங்கள் ஒரே தினத்தில் வெளியானதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு 2022 தீபாவளிக்கு ‘துணிவு’ படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே ஒரே ஆண்டில் தல பொங்கலை தியேட்டரிலும் தல தீபாவளியை தொலைக்காட்சியிலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith fans will celebrate Thala Diwali 2022

என்னுடன் சிறுத்தை ஒட்டிக் கொண்டது… எனவே கார்த்தி ஸ்பெஷலானவர்… – சிவா

என்னுடன் சிறுத்தை ஒட்டிக் கொண்டது… எனவே கார்த்தி ஸ்பெஷலானவர்… – சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் சிறுத்தை சிவா பேசும்போது…

“என்னுடைய பெற்றோர் எனக்கு சிவா என்று பெயர் வைத்தனர். ஆனால் கார்த்தி சாருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் எனக்கு முன்பாக சிறுத்தை என்கிற பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டது. அதனால் அவர் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷலானவர் தான். அவர் அந்த அளவிற்கு ஒரு நேர்மையான உன்னதமான மனிதர். அவருடைய தொழிலுக்கு எப்போதுமே அவர் உண்மையாகவே இருந்திருக்கிறார்.

அவருடைய நிறைய விஷயங்களை தனது தொழிலுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். சிறுத்தை படப்பிடிப்பின்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் அழகாக கையாண்டார். சிறுத்தை படத்தில் கார்த்தியை இயக்க ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி சொல்வதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறினார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் பேசும்போத….

“என்னை கார்த்தியிடம் சிவக்குமார் சார் அறிமுகப்படுத்திபோது அவர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையில் இருந்தார். அவருக்கு எப்படி நான் பயிற்சி கொடுக்க போகிறேன் என்பது அப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், சூர்யா சாரிடம் இருந்து கிடைத்த உற்சாகப்படுத்தலும் கூடுதல் கருவிகளாக அமைந்து விட்டன” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது…

‘கார்த்தி சாருடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய கடின உழைப்பு எப்போதுமே எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. கார்த்தி சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. அவருடைய முதல் டைரக்ஷனை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது புரட்சித்தலைவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விலைமதிக்க முடியாத பரிசாக ஆயிரம் முத்தங்களை கார்த்திக்கு வழங்கியிருப்பார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.. பொன்னியின் செல்வன் அவருக்கு கனவு திரைப்படமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே போனது. அப்படி இருந்திருந்தால் அவரது கனவு கதாபாத்திரத்தை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்று கூறினார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது….

‘கார்த்தியின் 25வது பட விழாவான இந்த அழகிய நிகழ்வில் இங்கே இடம்பெற்று இருப்பது மிகச்சிறப்பான ஒன்று. கார்த்திக்கும் இயக்குனர் ராஜூ முருகனுக்கும் ஜப்பான் போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமர்சியலாக மட்டுமல்லாமல் கலை சார்ந்த படைப்புகளிலும் வெற்றிகளை கொடுக்கக்கூடிய ஒரு விதிவிலக்கான நடிகர் கார்த்தி. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகமானதாக இருந்தது. சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்காக நிறைய உதவிகளை செய்து சமூக கடமை ஆற்றி வருகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

Siruthai title stick to my name by Karthi says Siva

‘ஜப்பான்’ இசை விழாவில் கார்த்தியை புகழ்ந்து தள்ளிய ரஞ்சித் & லோகேஷ்

‘ஜப்பான்’ இசை விழாவில் கார்த்தியை புகழ்ந்து தள்ளிய ரஞ்சித் & லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது…..

“மெட்ராஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி சார் சரியாக பொருந்தியிருந்தார். இதற்காக நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள்.

இப்போது ஜப்பான் திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது நான் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். மொத்த குழுவிற்கும் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது…

‘கார்த்தி சார் எப்போதுமே சினிமாவை பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. அதுமட்டுமல்ல அதுபற்றிய மிகப்பெரிய அறிவையும் அவர் கொண்டுள்ளார்.

ராஜூ முருகன் சாரிடம் இருந்து ஜப்பான் போன்ற ஒரு ஆச்சரியமான விருந்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. ராஜூ முருகனுக்கும் கார்த்தி சாருக்கும் ஜப்பான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

சக்தி பிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது…

, “கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்து இருக்கிறார். அதில் 18 படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று இருக்கின்றன. சிவாஜி கணேசன் சார் தான், தனது முதல் படமான பராசக்தியிலேயே தான் ஒரு முழுமையான நடிகர் என்பதை நிரூபித்தவர். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்தில் நடித்த கார்த்திக்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல ஐந்து வருடங்களில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நடிகர் யாரென்றால் அது கார்த்தி மட்டுமே. பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் அவர் வேறுவித வடிவம் பெற்றார். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் கஜினி ஆகிய படங்கள் தான் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் மொழிமாற்று படங்களில் ஒரு புதிய டிரென்டை உருவாக்கின” என்றார்.

இயக்குநர் பி.எஸ் மித்ரன் பேசும்போது….

“கார்த்தி சாருடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் முன்னணி இயக்குனர்கள் பலருடன் பணியாற்றிய தன்னுடைய அனுபவத்தை கொண்டு என்னை வசீகரித்ததன் மூலம் நான் ஒரு முழுமையான இயக்குனராக மாறினேன். எந்த நேரமும் சினிமா பற்றியே யோசித்துக் கொண்டு இருக்க கூடிய நபர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.

இயக்குநர் முத்தையா பேசும்போது….

“பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததுடன் அந்த படத்தில் அழகான மதுரை பாஷையில் கார்த்தி சார் பேசியிருந்தது ரசிருப்பதாக இருந்தது.

கொம்பன் படத்திற்காக அவரை அணுகியபோது நான் அவரிடம் ராமநாதபுரம் வித்தியாசமான ஒரு பாஷையை கொண்டது என கூறினேன். அவரும் அதற்கேற்ற மாதிரி தன்னை தயார் செய்துகொண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்” என்றார்.

Lokesh and Ranjith speech at Japan audio launch

ஆரம்பத்திலே கார்த்தி எனக்கு ஆதரவாக இருந்தார்… – தமன்னா

ஆரம்பத்திலே கார்த்தி எனக்கு ஆதரவாக இருந்தார்… – தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசும்போது…

“கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா சார், சிவா சார் ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்த இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள்.

கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

பையா படத்தில் இடம் பெற்ற அடடா மழைடா என்ற பாடலுக்கு கார்த்தி & தமன்னா மேடையில் நடனம் ஆடினர்.

At starting of my carrier Karthi supported me lot says Tamannah

More Articles
Follows