பர்ஸ்ட் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ் உடன் இணைந்த விஜய்சேதுபதி மகன்

பர்ஸ்ட் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ் உடன் இணைந்த விஜய்சேதுபதி மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.

அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பீனிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர்…

இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது…

“நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.

இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும்
இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

செய்தியாளர்களிடம் நாயகன் சூர்யா பேசும்பொழுது…

நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே உருவாக்குவேன்.. தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

நடிகர்கள்:
சூர்யா
விக்னேஷ்
வர்ஷா விஸ்வநாத்
அபி நக்ஷத்ரா
சத்யா NJ
சம்பத்
ஹரீஷ் உத்தமன்
திலீபன்
‘அட்டி’ ரிஷி
பூவையார்

தொழில்நுட்ப குழு:
எழுத்து மற்றும் இயக்கம் : ‘அனல்’ அரசு
தயாரிப்பு : ராஜலட்சுமி அரசகுமார்
இசை : சாம் CS
ஒளிப்பதிவு: R. வேல்ராஜ்
படத்தொகுப்பு : பிரவீன் KL
தயாரிப்பு வடிவமைப்பு: K.மதன்
சண்டைப் பயிற்சி: அனல் அரசு
ஆடை வடிவமைப்பு: சத்யா NJ
நிர்வாக தயாரிப்பு: MS முருகராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ்.K.அஹமத்

Vijay Sethupathi son Surya debut movie updates

‘அனிமல்’ படத்தில் எந்த சுகர்கோட்டும் இல்லாத ஒரிஜினல் கேரக்டர்.. – ராஷ்மிகா

‘அனிமல்’ படத்தில் எந்த சுகர்கோட்டும் இல்லாத ஒரிஜினல் கேரக்டர்.. – ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் ‘அனிமல்’ திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

இந்த நிகழ்வினில்…

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது.

அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது…

சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்

சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது…

இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி.

ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி.

முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து (தமிழ்நாட்டில்) பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது…

முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது.

படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி.

திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது…

அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம்.

அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக் கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது…

இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை.

இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான். எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.

நடிகர் பாபி தியோல் பேசியதாவது..

நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள்.

இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

Rashmika speaks about her character in Animal movie

‘ஜெயிலர் – லியோ – விக்ரம்’ படங்கள் குறித்து பேசிய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்

‘ஜெயிலர் – லியோ – விக்ரம்’ படங்கள் குறித்து பேசிய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் ‘அனிமல்’.

இந்த படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது…

மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும்.

இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன்.

இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது,

ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் லியோ விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.

பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல்.

தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: சந்தீப் ரெட்டி வங்கா
தயாரிப்பாளர்கள்: பூஷன் குமார் கிரிஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா
தயாரிப்பு நிறுவனம் : டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ், பத்ரகாளி பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Ranbir Kapoor speaks about Jailer Leo Vikram

கொடூரமான தொடரில் கீர்த்தி சுரேஷ் Vs ராதிகா ஆப்தே

கொடூரமான தொடரில் கீர்த்தி சுரேஷ் Vs ராதிகா ஆப்தே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக ‘அக்கா’வை உருவாக்கி உள்ளது.

முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும்
கடுமையான பழிவாங்கும் தொடராகும்! இந் கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே நடிப்பில் கொடூரமான தொடராக இருக்கும்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இன்று இந்தியாவில் மிகவும் திறமையான பெண் நடிகர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு இயல்பான கலைஞர்கள், திரையில் அட்டகாசமான திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் படத்திற்கு படம் அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்குக்கிறார்கள்.

எனவே, கீர்த்தியும் ராதிகாவும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவது அக்காவை தற்போது நாட்டில் உருவாக்கப்படும் மிகவும் சுவாரஸ்யமான ஸ்ட்ரீமிங் தொடர்களில் ஒன்றாக மாறி இருப்பதாக வர்த்தக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

“இந்தத் தொடரை அறிமுக எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார், இவர் சமீபத்தில் ஆதித்யா சோப்ராவால் கண்டறியப்பட்ட படைப்பாளி ஆவார். இவரின் ‘அக்கா’ தொடரின் தொலைநோக்கு பார்வை ஆதித்யாவின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் YRF என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தொடர்களில் ஒன்றாக ‘அக்கா’வை மாற்ற ஆதியின் சுருக்கமான விளக்கம் பச்சைக்கொடி காட்ட வழி செய்தது.

YRF என்டர்டெயின்மென்ட்டின் முதல் தொடரான தி ரயில்வே மென் தற்போது நெட்ஃபிளிக்ஸில் உலகளவில் டாப் 10 நிகழ்ச்சிகளில் டிரெண்டிங்கில் உள்ளதன் மூலம் உலகத் தரத்திலான வெற்றிக் கதையாக, மாறி உள்ளது.

ஆர். மாதவன், கே கே மேனன், திவ்யேந்து ஷர்மா மற்றும் பாபில் கான் ஆகியோர் நடித்த 1984 போபால் விஷவாயு சோகத்தின் வெளிகாட்டப்படாத ஹீரோக்களுக்கு இது அஞ்சலி.

YRF என்டர்டெயின்மென்ட்டின் இரண்டாவது தொடர் மண்டேலா மர்டர்ஸ் ஆகும், இது பல சீசன் தொடராகும், இது ஒரு மோசமான க்ரைம் த்ரில்லர். சண்டிகர் கரே ஆஷிகி திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா (குல்லாக் புகழ்) உடன் இணைந்து ஸ்ட்ரீமிங் தளத்தில் தனது முதல் அறிமுக தொடரை வழிநடத்துகிறார்.

சுர்வீன் சாவ்லா (துண்டிக்கப்பட்ட) மற்றும் ஜமீல் கான் (குல்லாக்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடர் தற்போது தயாரிப்பில் உள்ளது.

“ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் இந்தியாவின் திருப்திகரமான நிலப்பரப்பை வடிவமைப்பதில் பங்களிக்கக்கூடிய புதிய தடைகளை உடைக்கும் திட்டங்களை உருவாக்க விரும்புகிறது. ஒவ்வொரு திட்டத்திலும், இதுவரை யாரும் கண்டிராத அளவில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத இந்தியக் கதைகளைச் சொல்லும் நோக்கத்தை உறுதிப் படுத்துகிறது.

தி ரயில்வே மென்-ன் மிகப்பெரிய வெற்றி ரசிகர்களின் ஒருமனதான நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் அங்கீகாரத்தை உறுதிப் படுத்துகிறது” என வர்த்தக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Radhika apte and Keerthy Suresh at Akka web series

மனுஷங்களை மதிக்கல போல..; கடவுளுக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்

மனுஷங்களை மதிக்கல போல..; கடவுளுக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடவுளை கண்டேன் ..

பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது. இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது. நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது. 1% N.L.C. மின்சாரம். தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 1018.%கர்நாடகம் செலவழிக்கிறது. சர்வே ரிப்போர்ட்..

கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்ம்ம்……பி வழிகின்றன. தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும். கேரளா, கர்நாடகாவுக்கு டன், டன்னாய் லாரிகளில் விற்க்கப்படுகிறது. அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.

துத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலி…(லி) ஸார் கடவுள் தூக்கிலே போடும். காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீற்கப்படும். நெடுவாசல் நிறைய சேரி மக்கள் போராடிக்கொண்டே இருக்க, அதானி துறைமுகங்களில், ஏர்போர்ட் வழியாக நித்தம் டன்டன்னாக தங்கமும், கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்று உலகின் No 1. பணக்காரர்…அதானி, அம்பானி |

நாம்…அம்பாளை கும்பிடும் … வெறும் அம்பாநீ …..உப்பு தின்றவன். தண்ணி குடிக்கனும். யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை!! எமை ஆதரித்த யாவோரும் … முதல் உதிர்த்தவார்த்தை மன்சூரலிகான் செய்த தவறு. எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும். முன்னுதாரணமாக திகழ.. வேண்டி. யாம் பத்திரிக்கைக்கு அனுப்யது அறிக்கை. கடவுள் மனம் குளிர்ந்தது.

5 மாநிலத்தில் “கை” வெல்கிறது ஆறு மாதத்தில் “இ.ந்.தி.யா” வெல்கிறது.. Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதனானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!. சேரிப் புயல் திருமா… ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக …..பாம்பை…..? கண்டவனுக்கு மட்டுமல்ல… அனைவர்க்கும் தர்ஷனம் தருவாயாக…… அரோகரா!

யாம் அனுப்பியது கடிதம் அல்ல!

—மன்சூர் அலிகான்

Leo Actor Mansoor Alikhan request to God

திரிஷாவே மன்னித்துவிடு.. உன் திருமணத்தில் என் ஆசி.; அதானிக்கு கப்பம் கட்டும் அதானிந்தியா – மன்சூர் அலிகான்

திரிஷாவே மன்னித்துவிடு.. உன் திருமணத்தில் என் ஆசி.; அதானிக்கு கப்பம் கட்டும் அதானிந்தியா – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன்
எனை மன்னித்துவிடு!

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம்.

குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது.

இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும் அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார் அவர்கள்.

பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர்.

இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே
என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.

—மன்சூர் அலிகான்

Mansoor Alikhan apology to Actress Trisha

More Articles
Follows