விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா

இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “

இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா ஆகியயோர் நடித்துள்ளனர்.

இசை – யுவன்சங்கர் ராஜா

ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன்

எடிட்டிங் – ரூபன்

கலை – A.R,மோகன்

பாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா.

ஸ்டன்ட் – பிரதித் சீலம், ஹரி தினேஷ்

நடனம் – ஷெரிப்

மக்கள் தொடர்பு – மௌனம்ரவி

தயாரிப்பு – கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன்.

கிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S U.அருண் குமார்

நானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக , இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும்.

சூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும் அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும்.

விஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால், அவரை சுற்றி தான் கதை நகர்கிறது.

லிங்கா இப்படத்தின் வில்லனாகநடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் பெரும் முயற்சி எடுத்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பெரும் பகுதி தாய்லாந்து, மலேஷியா, கம்போடியா மற்றும் தென்காசியில் நடைபெற்றுள்ளது. படத்தில் நிறைய சுவாரஸ்யமான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை கலைஞர் பிரதித் சீலம் (எ) நுங் படமாக்கியுள்ளார்.

படம் வருகிற 21 ம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது என்றார் இயகுனர் S U.அருண் குமார்.

தமிழரசன் படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது

தமிழரசன் படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knack ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

விரைவில் இசை வெளியீட்டு விழாபிரமாண்டமாக நடைபெற உள்ளது.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய் ஆண்டனி

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு ” மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

விழாவில் விஜய் ஆண்டனி பேசியது..
எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாலர் இல்லாத நிலை வரவேண்டும் என்றார்.

விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ வரும் ஜூன் 21 வெளியீடு

விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ வரும் ஜூன் 21 வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’

முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின் கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
லிங்கா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து தனது எடையை 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ‘தாய்’ மொழியையும் கற்றுக்கொண்டு, வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மற்றும் தென்காசியில் படமாக்கப்பட்டு, 52 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. ‘தாய்’ மொழியில் டப்பிங் இருந்ததால், தாய்லாந்திலேயே அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமென்பதால், ஹாலிவுட் சண்டைகாட்சியமைப்பு வல்லுனர் ‘பிரதித் சீலம்’ என்ற ‘நுங்’ இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுமார் ஒன்பதரை நிமிடங்கள் ‘சிங்கிள் ஷாட் சீக்வன்ஸ்’ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்புக்கென பிரத்யேகமாக 100 க்கும் மேற்பட்ட தாய்லாந்து இளநிலை கலைஞர்களும், இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து, பல ஒத்திகைகளுக்கு பின்னர் காட்சிப் படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டீசர் வெளியானது முதல், எடிட்டிர் ரூபனின் புதிய அணுகுமுறை மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மனதிற்கினிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கோணங்களில் சண்டை காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

எதிர்வரும் ஜூன் 21ம் தேதி, ‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ தயாரிப்பில், இயக்குனர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

“ சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

“ சிந்துபாத் “ படத்தின் பாடல்களை விநியோகஸ்தர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார், விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், பைனான்சியர் மோகன் குமார், கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் அருண்குமார், மியூசிக் 7 நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
அவர் பேசுகையில்,“

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்து படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது மிகப்பெரிய படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குனர் அருண்குமார் பேசுகையில்,“

முதலில் இந்த கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் எனறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கேட்டார். அதன் பிறகு குறுக்கிடவே இல்லை. கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் வேகமாக இயங்குவதற்கு முழுமையான காரணம் அவர்தான். நான் யுவன்சங்கர்ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கினேன். அவர் நமக்கு சௌகரியமாக இருப்பாரா? என்றும் எண்ணினேன். ஆனால் அவர் நான் நினைத்ததை விட மிக எளிமையாகப் பழகினார். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை அளித்தார். அதன்பிறகு நடிகை அஞ்சலி. கதை முழுவதும் அவரை சுற்றி தான் நடக்கிறது. அவர்களும் அதை உணர்ந்து நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா விஜய், கார்த்திக் நேதா, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கதையை யோசிக்கும்போதே இந்த கேரக்டரில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய் சேதுபதியிடமே சொல்லியிருந்தேன். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,“

பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பை கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட. அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.
சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்தி சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர்கள் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாக இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பி, இவர்கள் என்ன செய்யலாம்? என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.
விவேக் பிரசன்னா ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.
படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மை மிக்க மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,“

இயக்குனர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாக பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்த படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லா பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய டுவிட்டரில் கூட அன்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று டூவிட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காக பின்னணி இசைக்கும் போது நான் வியந்து, ரசித்து, அனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்தான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .

எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாக பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாக பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கும் சிந்துபாத் படத்தை திரையரங்கில் பார்த்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

மீண்டும் பைக் ரேசராக மாறும் தல..; ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள்

மீண்டும் பைக் ரேசராக மாறும் தல..; ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை இயக்கிய வினோத் உடன் மீண்டும் தன் 60வது படத்திற்காக இணைகிறார் அஜித்.

இப்படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

சினிமாவைத் தாண்டி அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேசில் அதிக விருப்பம் உள்ளது. அதில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தனது புதிய படத்தில் பைக் ரேசராக நடிக்கவுள்ளாராம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், புடாபெஸ்ட் போன்ற மூன்று கண்டங்களில் சூட்டிங்கை நடத்த இருக்கிறார்களாம்.

More Articles
Follows