விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..?

விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..?

Vijays Thalaivi Ropes in Poorna to Play Sasikala roleமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க எடுக்க பலரும் முயன்று வருகின்றனர்.

கௌதம் மேனன் அவர்கள் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் விஜய் ’தலைவி’ என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதில் கங்கனாவின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

இந்த நிலையில் ஜெயாவின் நெருங்கிய தோழி கேரக்டரில் பூர்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் மனைவி ஜானகி வேடத்தில் மதுபாலா நடிக்கிறாராம்.

Vijays Thalaivi Ropes in Poorna to Play Sasikala role

மாஸ்டருக்கு அனுமதி மறுப்பு; கோவப்பட்டு கோவை செல்லும் விஜய்..?

மாஸ்டருக்கு அனுமதி மறுப்பு; கோவப்பட்டு கோவை செல்லும் விஜய்..?

Vijays Master audio launch venue updates லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்து வரும் படம் ‘மாஸ்டர்’.

இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி,
சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அண்மையில் விஜய் பாடிய குட்டி கதை பாடல் வெளியான நலையில் விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர்.

சமீபகாலமாக இசை விழாக்களில் விஜய்யின் பேச்சுக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயத்தில் அது அரசியல் உலகில் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சென்னையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே கோவையில் நடத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். ரெடியா இருங்கள்” என்று கூறியுள்ளார்.

விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master audio launch venue updates

‘கன்னி மாடம்’ டிக்கெட்டுடன் நாலு வரி பேச்சு போதும்; தங்கம் உங்களுக்குத்தான்…

‘கன்னி மாடம்’ டிக்கெட்டுடன் நாலு வரி பேச்சு போதும்; தங்கம் உங்களுக்குத்தான்…

Watch Kanni Maadam movie and win gold gift from Producerசின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.

இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்து இருக்கிறார் பட தயாரிப்பாளர் ஹசீர்.

கன்னிமாடம் படம் பார்க்கிறவர்களுக்கு தங்கம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குனர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.

இந்த படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சி படுதும் விதமாக இந்த தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.

அதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹசீர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

படம் பார்த்தால் தங்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Watch Kanni Maadam movie and win gold gift from Producer

BREAKING தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

BREAKING தர லோக்கலாக இறங்கிய ரஜினி; தலைவர் 168 டைட்டில் இதான்

Its Official now Rajinis Thalaivar 168 titled Annaattheசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 என தலைப்பு வைத்துள்ளனர்.

ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்க நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

மேலும் சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் கூடிடுவாங்க. பிரச்னை வரும்.; ஆஜராக விலக்கு அளிக்க ரஜினி மனு

இந்த நிலையில் அண்ணாத்த என படத்திற்கு தலைப்பிட்டு அறிவித்துள்ளனர்.

இதனை நாம் முன்பே நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த என்ற சொல் கிராமத்தில் அழைக்கப்படும் சொல்.

Its Official now Rajinis Thalaivar 168 titled Annaatthe

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் !

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் !

Director Mysskinசொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பாரம்” படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன் எனக்கூறியபடியே அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய விருதை வென்ற “பாரம்” திரைப்படம் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறியதாவது…

“பாரம்” படம் மீது இயக்குநர் மிஷ்கின் காட்டிவரும் அன்புக்கு விலைமதிப்பே கிடையாது.அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு புதுமுகங்களான எங்கள் மீது அவர் காட்டும் அன்பும் ஆதரவும் பிரமிப்பானது. இந்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. “பாரம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது அவர் பேசியதிலிருந்தே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது. தற்போது அவர் போஸ்டர் ஒட்டியதன் மூலம் படத்தின் மீதான கவனம் பன்மடங்கு பெருகியிருக்கிறது. இந்த அன்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்த்ரா ஸ்வரூப் மற்றும் ப்ரியா கிருஷ்ணசுவாமி இணைந்து Reckless Roses நிறுவனத்திற்காக தயாரித்திருக்கும் “பாரம்” திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களிடம் நல்ல படம் என்கிற பெயர் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா*

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா*

namitha at cocktail audio launchPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா-M.தீபா தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும்போது கனவுகளோடு இருப்போம் இல்லையா..? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. யார் என்ன சொன்னாலும் தூக்கி போட்டு விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒருநாள் அது நிறைவேறும்” என்றார்.

தயாரிப்பாளர் P.G.முத்தையா பேசும்போது, “சினிமா பற்றிய எந்த விஷயங்களும் தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன்.. எஸ்ஆர்எம் கல்லூரி சேர்ந்து படித்தபோதுதான் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த நான், இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் இது அனைத்தையுமே எனக்குத் தந்தது எஸ்ஆர்எம் கல்லூரி தான்” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, “எனக்கு வழக்கமான ரொமாண்டிக் படங்களை பார்த்து பார்த்து போரடித்து விட்டது.. எனக்கு இதுபோன்ற காமெடி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.. காக்டைல் படத்தை நான் தியேட்டருக்கு போய் பார்ப்பேன்” என்று கூறி கைதட்டலை அள்ளினார்.

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது ஒரு நல்ல சிவராத்திரி தினமாக பார்த்து காக்டெய்ல் ரிலீஸ் செய்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கிறது என்றால் அந்த நாளும் நல்ல நாள் தான்”என்றார்.

எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காக்டெய்ல் படத்தின் இசைத்தட்டை வெளியிட எஸ்ஜிசி சினிமாஸ் கனகராஜ், முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெய்ல்’ என்கிற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. வரும் மார்ச்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

*தொழிநுட்ப கலைஞர்கள்*

இயக்கம் ; ரா.விஜயமுருகன்
இசை ; S.சாய் பாஸ்கர் .
ஒளிப்பதிவு : RJ ரவீன்
படத்தொகுப்பு ; SN ஃபாசில்
கலை ; தினேஷ் மோகன்
பாடல்கள் : விவேக், ரவி
நடனம் : சந்தோஷ்
தயாரிப்பு நிர்வாகம் ; உமா மகேஸ்வர ராஜு
நிர்வாக தயாரிப்பு ; சௌந்தர் பைரவி
தயாரிப்பு ; P.G.முத்தையா-M.தீபா
மக்கள் தொடர்பு ; A.ஜான்

More Articles
Follows