தலைவி-குயின் படங்களுக்கு தடை கேட்ட ஜெ. தீபா..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

Thalaivi (1)மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் நடிக்க ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து அதை வெளியிட்டார்.

‘தி ஐயர்ன் லேடி’ என்ற பெயரிலும் ஒரு படம் உருவாகி வருகிறது.

தமிழில் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் விஷ்ணு வர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் படங்களுக்கும், இணையதளத் தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘தலைவி’, ‘ஜெயா’, ‘குயின்’ படங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது.

மேலும், படம் முழுக்க முழுக்கக் கற்பனையானது என டைட்டில் கார்ட் திரையிட உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஜெ.தீபா.

இத்துடன்…“இந்த படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தனக்குப் போட்டுக்காட்டி ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டும்” என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

ஏ.எல்.விஜய் தரப்பில்… ‘தலைவி’ என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலிதாவை நல்ல முறையில் சித்தரித்துள்ளோம். எதிர்காலச் சந்ததியினர் அவரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துள்ளோம்” என விளக்கம் அளித்துள்ளார்.

கௌதம் மேனன் தரப்பில்,…

“இந்த படத்தை சென்சார் போர்டு பார்த்து அவர்கள் சென்சார் செய்வார்கள்.

தடை கேட்க தீபாவுக்கு உரிமையும் கிடையாது” என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாக சம்பந்தப்பட்ட வாதங்கள் முடிவடைந்தது.

இந்த நிலையில், ‘தலைவி’, ‘குயின்’, ‘ஜெயா’ படங்களுக்கு தடை விதிக்க முடியாது.” என தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்..

High court dismisses ban on Thalaivi and Queen films

Overall Rating : Not available

Related News

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம்…
...Read More

Latest Post