தமிழில் மழை.. தெலுங்கில் இலா… ஹிந்தியில் ஜலி..; ‘தலைவி’ பாடலை வெளியிடும் சமந்தா

Thalaiviபுரட்சி தலைவி, தமிழக பெண்களின் ஆதர்ஷ நாயகி, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் சினிமா, அரசியல் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, பிரதிபலிக்கும் “தலைவி” படத்தின் டிரெய்லரை நாயகி சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கங்கனா ரனாவத் நடிப்பில் படத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புத மேஜிக்கை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நாயகி சமந்தா இந்தி மொழியில் “ஜலி ஜலி”, தமிழில் “மழை மழை”, தெலுங்கில் “இலா இலா” என மூன்று மொழிகளிலும் “தலைவி” படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிபடங்களை தந்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நாயகி சமந்தா தற்போது இந்தியில் பரபரப்பான இணைய தொடரான “ஃபேமிலி மேன்” இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதன் மூலம் இந்திய அளவில், புகழ்மிகு நடிகையாக மாறியிருக்கிறார்.

“தலைவி” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்த அவர், ஜெயலலிதாவின் நட்சத்திர திரைவாழ்வை சொல்லும் முதல் பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஜெயலலிதாவின் முதல் படமான “வெண்ணிற ஆடை 1965” படத்திலிருந்து துவங்கும் இப்பாடல், அவரது மறக்க முடியாத படங்களின், நடிப்பு துணுக்குகளை, கங்கனா ரனாவத்தின் அற்புத நடிப்பில் மீளுருவாக்கம் செய்துள்ளது.

இவ்வருடத்தின் மிக எதிர்ப்பார்ப்பிற்குரிய, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்றாக “தலைவி” படம் இடம்பிடித்திருக்கிறது.

பிரமிக்க தக்க வகையில் ஜெயலலிதா வாழ்வின் பக்கங்களை, நம் கண்முன் புரட்டி காட்டும்படி, மிக அழகான முறையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, சாதரண பெண்ணாக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தது, சிறு நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டாராக மாறியது, பின் போராட்டத்திற்கு பின் அரசியலில் இணைந்தது, பல தடைகளை உடைத்து அரசியலில் மலர்ந்து உயரிய பொறுப்பிற்கு சென்றது, தமிழகத்தை வடிவமைத்து, அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது என ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் பல அறிந்திராத பக்கங்களை நம் கண்முன் கொண்டுவரவுள்ளது இப்படம்.

Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும் Zee Studios , Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி சைலேஷ் R சிங், Sprint films சார்பில் ஹிதேஷ் தக்கர் மற்றும் திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். T- Series பாடல்களை வெளியிட “தலைவி” படத்தினை Zee Studios 23 ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

Mazhai Mazhai song video from #Thalaivi released by Samantha

Overall Rating : Not available

Latest Post