குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்.; சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரணாவத் ட்விட்டர் அக்கௌண்ட் முடக்கம்

kangana ranautபாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத்.

இவர் தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிகைக்கான 4 தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் ஏதாவது கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர்.

கடந்த சில தினங்களாக மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பாலோயர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

இதனையடுத்து அவர் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை முடக்கிவிட்டது.

கங்கனாவின் கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டு வந்ததால் அவருடைய ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என ட்விட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter suspends Kangana Ranaut account permanently

Overall Rating : Not available

Latest Post