பாலிவுட்டில் ஹீரோவுக்கே முக்கியத்துவம்.. தமிழில் படங்கள் பண்ண ஆசை..; 4 தேசிய விருது பெற்ற கங்கனா சென்னையில் பேச்சு

பாலிவுட்டில் ஹீரோவுக்கே முக்கியத்துவம்.. தமிழில் படங்கள் பண்ண ஆசை..; 4 தேசிய விருது பெற்ற கங்கனா சென்னையில் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைவி கங்கனா ரணாவத்,்பாலிவுட் கோலிவுட் கங்கனா, தலைவி படங்கள், தலைவி் கங்கனா ரணாவத், தலைவி ஜெயலலிதா கங்கனா எம்ஜிஆர் அரவிந்த்சாமி

தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில்…

நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது…

“தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன்.

பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார்.

மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை.

தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்.

என் திறமைக்கு மதிப்பளித்தார்{ அவர் இதனை கூறியபோது கண்கலங்க்கினார் } என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும்.

தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்” நன்றி

30 வருட கால ஜெயலலிதாவின் வாழ்வின் தடங்களை, ஒரு நடிகையாக, உயர்ந்த நட்சத்திரமாக, அவரின் போராட்டத்தை, பெரும் சூழ்ச்சிகளை வென்று சாதனை படைத்திட்ட அரசியல் வாழ்வை, அதன் தாக்கம் குறையாமல், உணர்வுபூர்வமாக வெள்ளித்திரையில் வெளிக் கொண்டுவரவுள்ளது “தலைவி” திரைப்படம்

Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும் Zee Studios , Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள்.

விஷ்ணு வர்தன் இந்தூரி சைலேஷ் R சிங், Sprint films சார்பில் ஹிதேஷ் தக்கர் மற்றும் திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

“தலைவி” படத்தினை Zee Studios 23 ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

I wish to act more films in Tamil says Actress kangana Ranaut

JUST IN விதவைகளுக்கு 3000.. பூரண மதுவிலக்கு.. விவசாயத்திற்கு பட்ஜெட்.. மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. தாய் மொழியில் மருத்துவக்கல்வி..; பாஜக தேர்தல் அறிக்கை

JUST IN விதவைகளுக்கு 3000.. பூரண மதுவிலக்கு.. விவசாயத்திற்கு பட்ஜெட்.. மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. தாய் மொழியில் மருத்துவக்கல்வி..; பாஜக தேர்தல் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது.

இதில் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ளது பா.ஜ.க.

இந்த நிலையில் இன்று ‘தொலை நோக்கு பத்திரம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக.

சென்னையில் இது தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

இதில் பாஜக மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்…

*பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர்.

* 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்.

*வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படும்.

*தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

*தாய் மொழியில் மருத்துவக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

* ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

*அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போடப்படும்.

*விவசாயிகளை போல் மீனவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.

*மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.

*முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.

* விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

*தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேலும் 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும்.

*5 ஆண்டுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை. தேவையான மணல் இறக்குமதி செய்யப்படும்.

* 18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இரு சக்கர வாகன இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

* இந்து கோவில்களின் நிர்வாகம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலிட மக்களிடமே வழங்கப்படும்.

*பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்.

* இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

*உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.

எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet

BJP releases its manifesto for Tamil Nadu polls

9 10 11 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்… தமிழக அரசாணை ரத்தாகுமா? கோர்ட் அதிரடி உத்தரவு

9 10 11 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்… தமிழக அரசாணை ரத்தாகுமா? கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பரவல் காரணமாக வகுப்புகள் 9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

கடந்த மாதம் பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி & நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தான் 11-ம் வகுப்பில் சேரும் போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும்.

தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை.” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள்…

“தமிழக அரசாணையை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை உரிய இதற்கான வழிகாட்டு விதிகளை அறிவிக்கவேண்டும்.”

என உத்தரவிட்டனர்.

Madras High Court Upholds TN Government’s “All Pass” Order

வருங்கால மனைவியின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்கும் விஷ்ணு விஷால்

வருங்கால மனைவியின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்கும் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார்.

அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…

சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன்.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.
இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன்.

திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது.

இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கும், சூரிக்கும் இடையிலான பிரச்சினை குறித்து…?

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை.

இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும்.

சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன்பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன்.

ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார்.

இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.

ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை.

என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்.

உங்களது திருமணம் குறித்து..?

அவர்கள் பெயர் ஜுவாலா குட்டா. பேட்மிட்டன் வீராங்கனை. தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

அவர்களை தேர்ந்தெடுக்கக் காரணம்?

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன்.

உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது. நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள்.

அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள்.

எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டப்போது, அதனை திரைப்படமாக தயாரிக்கலாமா..! என்று கேட்டேன்.

அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா? என க் கேட்டார்.

இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையை திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்.

உங்கள் மீது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்களே.. அதுகுறித்து..?

புகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இரவு என்னுடைய அறையில் நான் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம்.

அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார்.

நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் மற்றவர்கள் தான் என்னை தவறாக சித்தரிக்கின்றனர்.

ஆனால் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் வேறு. யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது. யாரேனும் உதவி கேட்டால் உன்னிடம் இருந்தால் உடனடியாக செய்து விட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

ஒரு தந்தையாக என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் என் தந்தை. எனக்காக பலரின் காலில் விழுந்ததும் எனக்குத் தெரியும்.

தற்போது எனக்கு நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

திறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது.

அதன் பிறகு ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது ‘எஃப் ஐ ஆர்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.

சூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறோனோ..! என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டுகாலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சினிமா கடினமான காலகட்டத்தில் இருக்கும் பொழுது உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

நான் ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.

ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

இதன் காரணமாக ‘ராட்சசன்’ படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன்.

அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார்.

இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.

திரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.

காடன் அனுபவம்?

எல்லா எமோஷன்களையும் கொண்ட கேரக்டர் அது. இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக்குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான்.

அவருடைய ஸ்டைலே தனிதான். பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கி சமூகத்தின் மீதான அக்கறையை மேம்படுத்தும் பொறுப்புணர்வு மிக்கவர்.

Actor Vishnu Vishal gives an interesting update on his next film

2வது முறை தேசிய விருது வென்ற நடிப்பு ‘அசுரன்’ தனுஷ்..; சிறந்த படமாகவும் அசுரன் தேர்வு

2வது முறை தேசிய விருது வென்ற நடிப்பு ‘அசுரன்’ தனுஷ்..; சிறந்த படமாகவும் அசுரன் தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு 2019 கொரோனா காரணமாக திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

எனவே 67-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் மையத்தில் 2019 ஆண்டுக்கான இந்திய மொழி படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி…

சிறந்த சினிமா விமர்சகர் பிரிவில் சோஹினி சாட்டர்ஜிக்கு தேசிய விருது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு.

அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதை ’போஸ்லே’ திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார்.

ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இவர் இதற்கு முன்பு இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை (2016) ஆகிய படங்களுக்காகவும் தேசிய விருதை வென்றிருக்கிறார்.

ஆடுகளம் படம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன.

மேலும் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை படமும் தேசிய விருது சிறப்பு பிரிவில் விருது வென்றது.

கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது.

இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.

66வது தேசிய திரைப்பட விருதுகள், 2019-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பாரம்’ தேர்வானது.

வேறு எந்தப் பிரிவிலும் தமிழ்த் திரையுலகுக்கு விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush bags best actor award at 67th national film awards

JUST IN ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் திடீர் மரணம்..; இளம் நடிகை வெண்பா இரங்கல்

JUST IN ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் திடீர் மரணம்..; இளம் நடிகை வெண்பா இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi kannamma Venkateshவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ்.

மேலும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்துள்ளார்.

அதில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

பெரும்பாலான டிவி சீரியல்களில் இவர் கிராமத்து தந்தையாக நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியல்களிலும் நடித்து வந்தார்.

மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘மாயநதி’ என்ற திரைப்படத்தில் வெண்பாவின் சித்தப்பாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் மரணமடைந்தார்.

இதனையறிந்த நடிகை வெண்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னத்திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bharathi Kannamma serial actor died due to cardiac arrest

More Articles
Follows