தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் இயக்கிய ‘தலைவி’ படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
இந்த படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் நடித்து அண்மையில் வெளியான ‘தாகத்’ படம் கடந்த மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்தார்.
அர்ஜுன் ராம்பால் நடித்த இப்படத்தை ரஜ்னீஷ் கய் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கவிருக்கிறாராம் நடிகை கங்கனா.
‘எமர்ஜென்சி’ என்று பெயலிடப்பட்ட இந்த படத்தை கங்கனாவே தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது இந்திரா காந்தியின் ‘பயோபிக்’ படமாக இல்லாமல் இந்திரா காலத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.
Kangana Ranaut to play Indira Gandhi following Jayalalithaa