‘தலைவி’க்கு தலைவர் ரஜினி பாராட்டு..; விஜய்யிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

‘தலைவி’க்கு தலைவர் ரஜினி பாராட்டு..; விஜய்யிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘தலைவி’

விஜய் இயக்கிய இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்து இருந்தனர்.

கருணாநிதியாக நாசரும் ஆர்எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும் சசிகலாவாக பூர்ணாவும் ஜானகியாக மதுபாலாவும் நடித்து இருந்தனர்.

ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டர்களில் செப் 10ல் தலைவி ரிலீசானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று செப் 12ல் திரையிடப்பட்டதாம்.

இயக்குனர் விஜய்யை அழைத்து, படத்தின் மேக்கிங் சூப்பர் என மனதார பாராட்டினாராம்.

தலைவர் ரஜினியின் பாராட்டால் தலைவி படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

Super Star Rajinikanth praises Thalaivi film

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *