தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றுவிட்டவர் நடிகர் தனுஷ்.
தமிழில் இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இவையனைத்துமே இந்தாண்டு 2018க்குள் ரிலீஸ் ஆகிவிடும்.
இந்நிலையில் தனுஷ் யு-டியூபில் ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அனிருத் இசையில் மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ என்ற பாடல் யு-டியூபில் 5 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.
இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொல வெறி என்ற பாடல் 14 கோடி ஹிட்ஸை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush and Anirudh team made one more record in you tube