படைவீரன் பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்

படைவீரன் பட சூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush at padaiveeran shooting spotஇவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர்.

படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான “லோக்கல் சரக்கா பாரின் சரக்கா… ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா… ” எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மதிவாணன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தனா

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன்

படத்தொகுப்பு – புவன் ஶ்ரீனிவாசன்

கலை இயக்குநர் – சதிஷ் குமார்

பாடல் – தனா, ப்ரியன், மோகன்ராஜன்

நடனம் – விஜீ சதிஷ்

சண்டை பயிற்சி – தில் தளபதி

நிர்வாக தயாரிப்பாளர் – விஜய்பாலாஜி

மக்கள் தொடர்பு – நிகில்

அஜித்தின் விசுவாசம் படத்தில் பணிபுரியம் கலைஞர்கள் யார்?

அஜித்தின் விசுவாசம் படத்தில் பணிபுரியம் கலைஞர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasam movie stillsவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தையும் சிவா இயக்கவுள்ளார்.

இதையும் விவேகம் படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அடுத்த வருடம் 2018 ஜனவரியில் தொடங்கி 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகவுள்ளதாகவும் அதே சமயத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

ரஜினி-கமல் வழியில் அஜித் படத்தலைப்பு முன்பே அறிவிப்பு ஏன் தெரியுமா?

ரஜினி-கமல் வழியில் அஜித் படத்தலைப்பு முன்பே அறிவிப்பு ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamal ajithவிவேகம் படத்தை அடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார்? அப்படத்தை தயாரிப்பது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

ஆனால் இன்று திடீரென அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்ட்டின் படி படத்தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி வரை அனைத்தையும் அறிவித்து விட்டனர்.

சிவா இயக்கவுள்ள இப்படத்திற்கு விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை அடுத்த வருடம் 2018 ஜனவரியில் தொடங்கி 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொதுவாக அஜித் படம் என்றால் படத்தின் சூட்டிங் பாதி முடிந்தவுடன் தான் தலைப்பை அறிவிப்பார்கள். அதன்பின்னர் டீசர், டிரைலர் என ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.

ஆனால் இம்முறை தலைப்பை அறிவித்து விட்டு சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

இந்த திடீர் மாற்றம் ஏன்? என்று விசாரிக்கையில்… விவேகம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

எனவேதான் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்காமல் முன்பே அறிவித்துவிட்டார்களாம்.

ரஜினியின் காலா, கமலின் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் படத்தலைப்பு அறிவித்த பின்னரே சூட்டிங்கை தொடங்கினார்கள்.

அதே வழியில் தற்போது அஜித் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

ஜோக்கர் புகழ் ராஜுமுருகன் கதை-வசனத்தில் நடிக்கும் கேட்டரிங் ரங்கா

ஜோக்கர் புகழ் ராஜுமுருகன் கதை-வசனத்தில் நடிக்கும் கேட்டரிங் ரங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chef Ranga acting in Raju Murugan scriptஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.

திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.

“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது.

இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும் சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம்.

அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது. இந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார்.

இருவருக்கும் பிடித்துப்போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்கு பின் ஒப்புக்கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்” என்றார் ராஜுமுருகன்.

இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன். கேமரா- மாநகரம் செல்வம்.

ஆர்ட் டைரக்‌ஷன்- சதீஷ். ஸ்டண்ட் – பில்லா ஜெகன். இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற படத்துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்தினர்.

Chef Ranga acting in Raju Murugan script

ஹாலிவுட்டை மிஞ்சும் அட்வெஞ்சர்; இமேஜ் இல்லாத கௌதம்: இந்திரஜித் பற்றி கலாபிரபு

ஹாலிவுட்டை மிஞ்சும் அட்வெஞ்சர்; இமேஜ் இல்லாத கௌதம்: இந்திரஜித் பற்றி கலாபிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kalaaprabu shares about Indrajith movieகலாபிரபு… தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம்.

ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார்.

படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து…

இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே?

என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும்.

டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன்.

அதனால ஸ்க்ரிப்ட்லயும் மேக்கிங்லயும் காம்ப்ரமைஸ் ஆகலை. நானே ஒரு காடுகளின் காதலன்கறதால எனக்கு இந்த சப்ஜெக்ட் ஈசியா இருந்தது. இதுல ஹீரோ கேரக்டர் ட்ராவல் பண்ணதுல முக்கால்வாசி நான் ஏற்கனவே பண்ணியிருக்கேன். வேலையா பண்ணாம புடிச்ச விஷயத்தை பண்ற மாதிரி பண்ணேன்.

கதை உருவாக்கம், மேக்கிங் பத்தி?

முதல்ல ஆக்‌ஷன் ப்ளஸ் ட்ராவல் அட்வெஞ்சர்னு ஒரு லைன் பிடிச்சேன். அந்த ஐடியாவை டெவலப் பண்ணும்போது ஒரு இண்ட்ரெஸ்டிங் ஸ்க்ரிப்ட் வந்துச்சு. ஹாலிவுட்லயே இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வர்றது இல்லைனு சொல்லலாம்.

அதே மாதிரி அட்வெஞ்சர்னாலே நமக்கு தோணுற க்ளிஷேக்கள் எதுவும் இதுல இருக்காம பார்த்துக்கிட்டேன். முக்கியமா வழிதெரியாம மாட்டிக்கிறது, புதைகுழி, கண்ணி வெடி போன்ற எதையுமே தொடாம ஒரு அட்வெஞ்சர் ஸ்க்ரிப்ட் பண்றது பெரிய சவாலா இருந்தது. அதனால தான் ஹாலிவுட் பட க்ளிஷேக்கள் கூட இருக்காதுனு சவாலா சொல்றேன்.

இப்ப ஓகே… ஆனா நீங்க கமிட் பண்ணப்ப கௌதம் கார்த்தி கடல் கௌதமா தான் இருந்தாரு… அப்புறம் எப்படி இந்த கேரக்டருக்கு…?

ஆமா, நான் கமிட் பண்ணப்ப கடல் மட்டும் முடிச்சுட்டு ஸ்கூல் பையன் மாதிரி இருந்தாரு. பார்த்தாலே கொஞ்சுற மாதிரி இருக்கற ஒரு சாக்லேட் பையனைத்தான் கொண்டு வந்தேன்.

என் கதைக்கு இமேஜே இல்லாத ஒரு ஹீரோ தான் தேவைப்பட்டாரு. மக்கள் மத்தியில ஏற்கனவே நல்லா ரீச் ஆன ஒருத்தர்ன்னா கேரக்டரோட நம்பகத்தன்மை போயிடுமேன்னு பயந்தேன். ஆனா நான் நினைச்சதை விட பெட்டர் ஆப்ஷனா கௌதம் இருந்தாரு.

கௌதம் கார்த்திக்குக்கு செம டஃப் கொடுக்கற வில்லனா சுதான்சு பாண்டே பண்ணியிருக்கார். செம ஸ்ட்ராங்க் கேரக்டர்.

இவருக்கு தமிழ்ல நல்ல எதிர்காலம் இருக்கு. மத்த ஆர்ட்டிஸ்ட்களும் தங்களோட சிறந்த பங்களிப்பை கொடுத்துருக்காங்க.

சக்கரகட்டிக்கு பிறகு ஏன் இந்த இடைவெளி?

இது நானா எடுத்துகிட்ட கேப் தான். இந்த இடைவெளில நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்.

அப்பாவே தயாரிப்பாளர்ன்னா சுதந்திரமா நெருக்கடியா?

நெருக்கடிதான். மற்ற இயக்குநர்கள்னா ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிடலாம். ஆனா நான் வீட்டுக்கு வந்தாலும் அங்கே என் தயாரிப்பாளர்தான் இருப்பார்.

அவர் முகத்துலேயே முழிச்சுட்டு தான் கிளம்பணும். அப்ப நெருக்கடி இருக்காதா? ஆனா அப்பா மற்ற இயக்குநர்களுக்கு என்ன சுதந்திரம் கொடுப்பாரோ அதை அப்படியே எனக்கும் கொடுத்தாரு. அப்பா கேட்கிற அளவுக்கு பண்ணிடக்கூடாதுனு பயந்துட்டே பண்ணினதால தான் படம் நல்லா வந்துருக்கு.

கேமரா, இசை?

ராசாமதி என்கூட சக்கரகட்டிலேருந்து ட்ராவல் பண்ற நண்பன். என்கூட எப்பவும் இருந்து என்னை முழுமையா நம்புறவரு.

கலாபிரபு பண்ணினா அது கரெக்டா இருக்கும்னு அப்படி ஒரு நம்பிக்கை. ஸோ நாம நம்ம வேலையை பார்க்கலாம். ஷூட்டிங்ல தாமதம் ஆகாது. இசையமைப்பாளர் கேபி க்கு இது முதல் படம் மாதிரியே தெரியாது. பாடல்கள் மாதிரியே பின்னணி இசையும் சிறப்பா பண்ணியிருக்கார்.

Director Kalaaprabu shares about Indrajith movie

indrajith

அஜித் அடுத்த தலைப்பு & ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் அடுத்த தலைப்பு & ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and director sivaசத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது.

பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.

அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு
“விசுவாசம்” என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

2018 தீபாவளி அன்று
“விசுவாசம் ரிலீஸ் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்துள்ளார்

More Articles
Follows