தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம், எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் மாரி 2 படம் படத்தை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை 28ஆம் தேதி (ஒரு நாள் முன்னதாக 27) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படத்தையும் தனுஷ் பிறந்தநாளில் வெளியிடவிருந்தனர்.
ஆனால் சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போனது.
எனவே போன வருடம் போல இந்த வருடம் மிஸ் ஆகாது என நம்பலாம்.
பாலாஜிமோகன் இயக்கவுள்ள மாரி 2 படத்தில் தனுஷ் உடன் சாய்பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.