தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay tv ddமுன்னனி நடிகரான தனுஷ் தற்போது முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

இதில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்க அவருடன் மடோனா செபாஸ்டியனும் நடித்து வருகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் இரண்டு பாடல்களை செல்வராகவன் எழுதியிருக்கிறாராம்.

இந்நிலையில் இதில் விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினியும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த டிடி, தற்போது மீண்டு தனுஷ் உடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் படத்தலைப்பு குறித்த தகவல்

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் படத்தலைப்பு குறித்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி, ரோகினி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடக்கம் முதல் ரிலீஸ் தேதி வரை அனைத்தையும் அறிவித்து ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்து வருகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

இப்படத்தை அடுத்த வருடம் 2017ல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை 2017 ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

‘அதுக்கும் மேல செஞ்சீட்டிங்க பாஸ்…’ பரதனை பாராட்டிய பைரவா

‘அதுக்கும் மேல செஞ்சீட்டிங்க பாஸ்…’ பரதனை பாராட்டிய பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa teamஅழகிய தமிழ் மகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அப்பட இயக்குநர் பரதனுக்கு மீண்டும் பைரவா வாய்ப்பை வழங்கினார் விஜய்.

விஜய்யின் இந்த முடிவுக்கு நிறைய பேர் வருத்தம் தெரிவித்தனர்.

ஆனால் விஜய் பாஸிட்டிவ்வாக நினைத்தார்.

தற்போது விஜய் நினைத்தது போலவே, படம் நன்றாக வந்துள்ளதாம்.

எனவே பரதனை அழைத்து, ” சொன்னதை விட அதுக்கும் மேலே செஞ்சிட்டீங்க பாஸ்.. நிச்சயம் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்” என பாராட்டினாராம் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

‘2.0’ சூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட காயம்

‘2.0’ சூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட காயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2.ஓ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இதில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஸ்லிப்பாகி தவறி விழுந்துவிட்டாராம்.

அப்போது அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

உடனே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்ற பின்னர் ரஜினிகாந்த் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனையறிந்த ரசிகர்கள் தலைவருக்கு என்ன ஆனதோ? என அதிர்ச்சியில் இருந்தனர்.

அவர் வீடு திரும்பியதை அறிந்தபின்னரே சமாதானமாகியுள்ளனர்.

“ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன்..” பிரபுதேவா பேச்சு

“ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன்..” பிரபுதேவா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan teamலட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி மற்றும் ஹன்சிகா நடித்துள்ள படம் போகன்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபுதேவா மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சற்றுமுன் சென்னையில் ஈஞ்சம்பகாக்கத்தில் நடைபெற்றது.

இதில் ஜெயம் ரவி பேசும்போது…

“போகன் என் வாழ்க்கையில் முக்கியமான படம். பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார்.

ஹன்சிகா பேசும்போது… “ஜெயம் ரவி மற்றும் லட்சுமணன் ஆகியோரின் வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

பிரபுதேவா பேசும்போது… “ஹன்சிகாவின் நடிப்பை அடிக்கடி சூப்பர் சூப்பர் என்பேன்.

ஜெயம் ரவி நடிப்பில் ஒரு குட்டி கமல்ஹாசனைப் போன்றவர்” என்றார்.

சிங்கம்-3 படத்தின் வியாபாரமும் ரிலீஸ் திட்டமும்

சிங்கம்-3 படத்தின் வியாபாரமும் ரிலீஸ் திட்டமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movie imagesஇன்னும் 20 நாட்களில் (அதாவது டிச. 23) சூர்யா நடித்த சி-3 படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 42 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கேரளாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளதாம்.

இரண்டு மிகப்பெரிய பிரபலங்கள் இதன் கேரளா உரிமையை பெற்று இருக்கிறார்கள்.

அவர்கள் இப்படத்தை கேரளாவில் 180 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows