தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.
ஓரிரு தினங்களுக்கு முன்தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றது.
இந்நிலையில் இவர் விரைவில் விஜய் சேதுபதியுடன் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
இப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் ‘காஷ்மோரா’ படங்களை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இப்படம் ஆக்ஷன் கலந்த காமெடியாக உருவாகவிருக்கிறது.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்டில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Vijay sethupathi teams up with Amy Jackson