தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
சைத்தான் படத்தில் அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
வருகிற நவம்பர் 3ஆம் தேதி ‘சைத்தான்’ படத்தின் இசையை வெளியிட உள்ளனர்.
அப்போதே இப்படத்தில் உள்ள முதல் 5 நிமிட காட்சிகளை திரையிடவிருக்கிறார்களாம்.
இந்த 5 நிமிடங்கள் படத்தை பற்றிய ஒரு அவுட்லைனை கொடுக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
இதற்குமுன்பு, ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.