தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா ராமானுஜம். பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் பெரும் பணக்கார அம்மாவாக நடித்துள்ளார்.
2019-க்குப் பிறகு எந்தப் படத்திலும் தோன்றாத தீபா, 2020-ல் பெண்களுக்கான ஜீன்ஸ் பிராண்டைத் தொடங்கி தொழிலதிபராக மாறியுள்ளார். அந்த வணிகம் லாபகரமாக மாறியதால், அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்று கிளை ஒன்றைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் தீபாவைப் பின்தொடரும் ரசிகர்கள், மாடர்ன் உடையில் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
‘Pichaikkaran’ actress Dheepa Ramanujam turns a successful business woman in real life