தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகியது.
இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுபேஸ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது மூவரையும் ஜாமினில் விடுவித்துள்ளனர்.
Police arrested pichaikkaran 2 movie members