அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் படங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhishek filmsதமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.

முதல் படம் – சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் சித்தார்த் – ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது படம் – நட்ராஜ், இஷாரா நாயர் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்த “சதுரங்க வேட்டை” படத்தை தெலுங்கில் “Bluff Master” என்ற தலைப்பில் தயாரிக்கின்றார். கதாநாயகனாக சத்யதேவ், கதாநாயகியாக நந்திதா நடிக்கின்றனர்.

முன்றாவது படம் – இளைங்கர்களுக்கு பிடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம்.

நான்காவது படம் – நடிகை டாப்ஸி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற “ஆனந்தோ பிரமா” படத்தை தமிழில் தயாரிக்கின்றார்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பை கூட்டும் விதத்தில் படங்களை வரிசைப்படுத்தி தயாரிக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை, தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் திரையுலகிலும், ரசிகர்களின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடிக்கும் என்கிறார்

விஜய் சந்தோஷ்-சிருஷ்டி டாங்கே இணைந்து நடிக்கும் *அர்ஜுனா*

விஜய் சந்தோஷ்-சிருஷ்டி டாங்கே இணைந்து நடிக்கும் *அர்ஜுனா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjuna“Spicy Cloud Entertainments” சார்பில் K.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் “அர்ஜுனா” .

இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். M.A.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.

இந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.

பார்ட்டி & சார்லி சாப்ளின் 2 படங்களை கை பற்றிய சன் டிவி

பார்ட்டி & சார்லி சாப்ளின் 2 படங்களை கை பற்றிய சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

party and charlie chaplinஅம்மா கிரியேசன்ஸ் T.சிவா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 …

இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பு வியாபாரத்திற்கு உதவியாகவும் அமைந்திருக்கிறது..

வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் பார்ட்டி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது.

அதே மாதிரி இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

காரணம் ஷக்திசிதம்பரம் ஏற்கெனவே இயக்கி வெற்றி பெற்ற சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நடித்த அதே பிரபுதேவா, பிரபு உட்பட பல நட்சத்திரங்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்பதும் தான்.

அது மட்டுமில்லாமல் கமர்ஷியல் இயக்குனராக உலகம் அறிந்தவர் ஷக்திசிதம்பரம். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் அமோக வெற்றி பெற்றோருக்கிறது.

இந்த இரண்டு படங்களின் தொலைகாட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அம்மா கிரியேசன்ஸ் தயாரித்த பல படங்களையும் ஷக்தி சிதம்பரம் இயக்கி தயாரித்த பல படங்களையும் வெங்கட் பிரபுவின் பல படங்களையும் வாங்கிய சன் டிவி நிறுவனம் இந்த படங்களையும் வாங்கி இருப்பதால் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

பாட்டு எழுத ஆசையிருக்கா.? காற்றின் மொழி-க்காக பாடல் எழுதுங்க!

பாட்டு எழுத ஆசையிருக்கா.? காற்றின் மொழி-க்காக பாடல் எழுதுங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaatrin Mozhi team invites aspiring lyricists to embark on their journey in film industryபாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “.

இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்துள்ளது.

பாடல் எழுத தெரிந்தவர்கள், சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ).

போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம்.

Kaatrin Mozhi team invites aspiring lyricists to embark on their journey in film industry

Kaatrin Mozhi team invites aspiring lyricists to embark on their journey in film industry

செல்போன்களை பறிக்கும் கழுகு..; ரஜினியின் 2.0 டீசர் விமர்சனம்

செல்போன்களை பறிக்கும் கழுகு..; ரஜினியின் 2.0 டீசர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths 2point0 teaser reviewஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ. 545 கோடியில் தயாரித்துள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 29ஆம் தேதி கிட்டதட்ட 13 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இதன் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீசாகியிள்ளது.

இந்த டீசர் 1 நிமிடம் 30 நொடிகள் ஓடுகிறது. அது அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் வகையில் இந்த டீசரை ஷங்கர் உருவாக்கியுள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் மனிதர்களிடம் உள்ள செல்போன்கள் திடீரென மாயமாகிறது.

ஒரு மிகப்பெரிய ராட்சஷ கழுகு ஒன்று அதை பறித்து செல்கிறது. மனிதர்கள் பயன்படுத்தும் செல்போன் கதிர் வீச்சால் பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்தினால் அந்த கழுகு தன் இனத்தை காப்பாற்ற அவற்றை பறித்து செல்கிறது.

மேலும் மக்களை துன்புறுத்துகிறது. அனைவரும் தவிக்கும் வேளையில் விஞ்ஞானி வசீகரன் மீண்டும் தன் சிட்டி ரோபோவை கொண்டு வர முயற்சிக்கிறார்.

முதல் பாகமான எந்திரன் திரைப்படத்தில் கோர்ட் உத்தரவு படி சிட்டி ரோபோட் காட்சி பொருளாக வைக்கப்பட்டது.
தற்போது அந்த ரோபோவை உயிர்ப்பித்து பறவைகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவதாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

Rajinikanths 2point0 aka 2.0 teaser review

இந்தியாவை கலக்கும் 2.0 டீசர்; 6000 தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்

இந்தியாவை கலக்கும் 2.0 டீசர்; 6000 தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2point0 Teaser released in 6000 screens around Indiaஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரையுலகில் அறிமுகமாகி 43 ஆண்டுகளை கடந்துவிட்டார் ரஜினிகாந்த். அவரது கேரியரிலேயே ஏன்.. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தான் இது.

ரூ. 545 கோடியில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,000-த்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் 2.0 படம் உருவாகியுள்ளது.

நவம்பர் மாதம் 29-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசரை இன்று செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு இணையம் மற்றும் திரையரங்குகளில் வெளியிட்டனர்.

சமீபகாலமாக டீசரை இணையங்களில் மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளதால் இதன் 3டி டீசரை தியேட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 1000 தியேட்டர்களில் 3டியிலும் 5000 தியேட்டர்களில் 2டியில் வெளியிட்டுள்ளனர்.

தியேட்டரில் இலவசமாக திரையிடப்படுவதால் காலை முதலே தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தனர்.
பெரிய திரையில் டீசரை பார்த்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

Rajinis 2point0 Teaser released in 6000 screens around India

https://www.filmistreet.com/video/2-point-0-teaser/

More Articles
Follows