தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வின்னர் பட்டம் பெற்றவர் ஆரவ்.
இவர் ‘சைத்தான்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஆரவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சுரபி ஃபிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘ராஜபீமா’ என்று பெயரிட்டுள்ளனர்.
‘கருந்தேள் ராஜேஷ்’ என்பவர் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ‘ சைமன் கிஷ் இசையமைக்கிறார். எடிட்டிங் கோபி கிருஷ்ணா.
கும்கி பட வரிசையில் யானையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.