தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன் 2’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தாண்டி படத்தின் தலைப்புக்கு ஏற்ப பிச்சைக்காரர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
பிச்சைக்காரர்களுக்கு போர்வை ஃபேன் விசிறி தலையணை உடை உள்ளிட்டவைகளை வழங்கி அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார் விஜய்.
மேலும் பிச்சைக்காரர்களுக்கு என ‘பிச்சைக்காரன்2’ பட சிறப்பு காட்சியை ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.
மேலும் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் பிச்சைக்காரர்களுக்கு தன் கையால் பறிமாறி உணவளித்து மகிழ்ந்தார்.
இந்த நிலையில் கேன்சர் நோயாளி சிகிச்சைக்கு ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பை விஜய் ஆண்டனி தரப்பு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எல். மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த புதிய முயற்சியை விஜய் ஆண்டனி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Vijay Antony’s decision to help those suffering from serious illness