*ராஜதந்திரம்* புகழ் வீரா நடிக்கும் *அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா*

*ராஜதந்திரம்* புகழ் வீரா நடிக்கும் *அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajathandhiram fame Veeras next titled Arasiyalla Idhellam Saadharnamappaராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா தற்போது நடித்து வரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து, வெளிவரும் தருவாயில் உள்ளது.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

அதர்வா மற்றும் ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் “100” படத்தையும் . ஆதி நடிப்பில் ஆர் எக்ஸ் 100 என்கிற திரைபடத்தையும் இதே நிறுவனத்தார் தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

வீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி மாளவிகா நாயர்.

பல்வேறு படங்களை நிராகரித்து வந்த மாளவிகா இந்த கதையை கேட்ட மாத்திரத்தில் ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா, ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், madly ப்ளூஸ் இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில், விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” ரசிகர்களை கட்டிப்போட்டு கவர்ந்து இழுக்கும் படமாகும்.

மிகச் சிறந்த நடிக நடிகையர், திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

படத்தின் தரத்தை பற்றி கேள்விப்பட்ட க்ளாப் போர்டு புரொக்டசன்ஸ் நிறுவனத்தை சார்ந்த சத்யமூர்த்தி உடனே இந்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை பெற்று உள்ளார். அவருக்கு என் நன்றியை உரிதாக்குகிறேன்.

இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம்” என நம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணு கோபால்.

Rajathandhiram fame Veeras next titled Arasiyalla Idhellam Saadharnamappa

Arasiyalla Ithellam Satharanamappa

முன்னாள் “சர்கார்” முதல்வருக்கு இந்நாள் “சர்கார்” தளபதி அஞ்சலி

முன்னாள் “சர்கார்” முதல்வருக்கு இந்நாள் “சர்கார்” தளபதி அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay back to Chennai from Sarkar Shoot and pays homage to Late Karunanidhiதமிழத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழக சர்காரை (அரசாங்கத்தை) 5 முறை ஆட்சி செய்த இவரது இழப்பு தமிழகத்திற்கு பெரும் பேரிழப்பாகும் என பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கலைஞரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய், வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அந்த படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Vijay back to Chennai from Sarkar Shoot and pays homage to Late Karunanidhi

பெண்கள் மீது கை வைத்தால் குற்றம்; டைட்டில் கார்டு போட *தாதா-87* மிரட்டல்

பெண்கள் மீது கை வைத்தால் குற்றம்; டைட்டில் கார்டு போட *தாதா-87* மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If You touch Girl I will burn You DhaDha87 team request Govt to approve Title Cardஒரு படம் தொடங்கும்போது…. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு. புகைப்பிடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்களை பார்த்திருப்போம்.

சிகரெட் பாக்கெட்டில் இது போல போட்டு இருந்தாலே அதை பலரும் பின்பற்றுவதில்லை என்பதெல்லாம் வேறு கதை.

சரி. விஷயத்துக்கு வருவோம்.

மது மற்றும் புகை பிடிக்கும் வாசகங்களை தொடர்ந்து பெண்கள் மீது அனுமதியின்றி கை வைத்தால் அது குற்றம் என்ற வாசகத்தை அதுபோல் திரையில் போட வேண்டும் என தாதா87 படத்தின் டைரக்டர் ஸ்ரீவிஜய் தெரிவித்துள்ளார்.

சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 படத்தில் ஒரு முக்கியமான டயலாக் இடம் பெறுகிறது. பெண்கள் மீது கை வைத்தால் எரித்து விடுவேன் என்பதுதான்.

இதுகுறித்து டைரக்டர் ஸ்ரீவிஜய் பேசும்போது…

நாட்டில் தினம் தினம் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. சின்ன சின்ன சிறுமிகளை கூட விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கு என்ன தெரியும்.

அவர்களை விட மனநல பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் தொல்லை செய்கிறார்கள். அவர்களால் எப்படி அதை சொல்ல முடியும்.

எனவே பெண்கள் மீது அனுமதியின்றி கை வைத்தால் அது குற்றம் என போட வேண்டும்.

மது மற்றும் சிகரெட் நாமே பணம் கொடுத்து பெற்றுக் கொள்வது. மதுவையும் சிகரெட்டையும் அரசு தான் விற்பனை செய்கிறது.

அதற்கே அவர்கள் டைட்டில் எச்சரிக்கை போடும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் அவர்கள் செய்யலாமே.” என பேசினார் தாதா 87 படத்தின் டைரக்டர் ஸ்ரீவிஜய்.

If You touch Girl I will burn You DhaDha87 team request Govt to approve Title Card

dhadha 87 audio launch

கலைஞர் கருணாநிதிக்கு திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

கலைஞர் கருணாநிதிக்கு திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Industry decided to conduct homage event for Late Karunanidhiதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.

எனவே, கலைஞருக்கு திரையுலகினர் சார்பில் வரும் 13-ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் கலை, இலக்கிய, திரைத்துறை பிதாமகனுமான கலைஞர் மு.கருணாநிதிக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil film Industry decided to conduct homage event for Late Karunanidhi

*ஆண் தேவதை*-க்காக 2 பண முடிப்பை பரிசாக பெற்ற ரம்யாபாண்டியன்

*ஆண் தேவதை*-க்காக 2 பண முடிப்பை பரிசாக பெற்ற ரம்யாபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joker fame Ramya Pandian got two cash bags for Aandhevadhaiஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..

“ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார்.

அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..

சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன்.

காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்..

சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார்.. அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன்.

அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படம் ஒப்புகொள்றதுக்கு முன்னாடி சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார்.

அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல, வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக்குனு வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்துச்சு.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுறபோது ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்துச்சு.. ஆரோக்கியமான விவாதம் தான்.

ஆனால் படத்துல அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது.

அதேசமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.

என்னோட நடிப்பை பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க.. அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசினபோதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன்.

சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்துவிட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.

அடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க… குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன்.

ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது.

அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.

ஜோக்கர் படம் மல்லிகாவைத்தான் ரசிகர்களிடம் அதிகமா கொண்டுபோய் சேர்த்தது.. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும்.

ஏன்னா ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா? நான் வெளிய தெரியவே இல்லை.. நிறைய பேர் நம்பவே இல்லை..

அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம்.

மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.

மும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.

இந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என் ஏதாவது ஒரு விஷயமாவது நம்ம கவரவேண்டும் இல்லையா..? அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

இந்தப்படம் வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை.

ஆனா கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியா இருக்கிறேன்” என்கிறார் ரம்யா பாண்டியன்.

Joker fame Ramya Pandian got two cash bags for Aandhevadhai

Samuthirakani and Ramya Pandian in Aandhevadhai

பாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்

பாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pa Vijay must continue his song writing works says Bhagyarajவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்…

‘எனக்கும் பா விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.

பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.

இந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன்.

இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார்.

இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.’ என்றார்.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில்,‘நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா விஜயைப் பிடிக்கும்.

இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.

அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றிவிடுவார்.

ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.

நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம்.

அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.’என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்…

‘என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது.

அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார்.

இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.

இந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை.

அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.

Pa Vijay must continue his song writing works says Bhagyaraj

More Articles
Follows