நிஜமாலுமே ‘கெத்து’ காட்டும் அஜித் ரசிகர்கள்

நிஜமாலுமே ‘கெத்து’ காட்டும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vedalam ajithவருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் அஜித் நடித்த வேதாளம் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இதற்காக ரோகினி திரையரங்கில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதலில் ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் ரசிகர்கள் பேராதரவு பெருக பெருக தற்போது நான்கு காட்சிகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜிகே சினிமாஸிலும் சிறப்பு காட்சிக்கு (மாலை 7.05 மணிக்கு) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்போகிறார்களோ…?

ரஜினியின் ‘2.ஓ’ சூட்டிங் நிறுத்தம்… யார் காரணம்.?

ரஜினியின் ‘2.ஓ’ சூட்டிங் நிறுத்தம்… யார் காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini enthiranஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்சய்குமார், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதால், இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இப்படம் இன்று தொடங்குவதாக இருந்தது.

ஆனால் இன்றும் தொடங்கப்படவில்லை.

ஏனென்றால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ரஜினி, எமி, சுதன்ஷ பாண்டே சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

இது சென்னையில் உள்ள ஈவிபி யில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரே படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கதை எழுதும் 5 இயக்குனர்கள்

ஒரே படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கதை எழுதும் 5 இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiநீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த விஜய்சேதுபதியின் மெல்லிசை படம் புரியாத புதிர் என்ற பெயர் மாற்றத்துடன் இம்மாதம் வெளியாகிறது.

இதனையடுத்து, இவரது ஓரிரு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ‘ஆரண்ய காண்டம்’ படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இதில் சமந்தா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் ஜனவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

ஆந்திராவை சுழற்றி அடிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

ஆந்திராவை சுழற்றி அடிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், நாசர், ராதாரவி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன் டீசரை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

படத்தை டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ. 3.5 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாம்.

இவை தவிர தெலுங்கு (ஆந்திரா + தெலுங்கானா) தியேட்டர்கள் ரிலீஸ் உரிமை மட்டும் ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்…

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saithaan‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘சைத்தான்’.

இதில் அருந்ததி நாயர் நாயகியாக நடிக்க, ஒய்.ஜி. மகேந்திரன், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்றுமுன் இன்று நடைபெற்றது.

விழாவின் ஹைலைட்ஸ் இதோ…

  • சிறப்பு விருந்தினராக சிபிராஜ் கலந்து கொண்டார்.
  • இப்படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் திரையிடப்பட்டது.
  • சைத்தான் பட செட் ஆர்ட் ஒர்க்கை பார்த்து பிரமித்துபோனேன். இப்படம் மாபெரும் வெற்றியடையும் என்றார் இயக்குனர் சசி.
  • விஜய்யின் வளர்ச்சியை கண்டு எப்படி சந்தோஷப்பட்டேனோ அதுபோல விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் என்றார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
  • பிச்சைக்காரன் வெற்றியால், தெலுங்கிலும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளதாம் அங்கு பலத்த போட்டி எழுந்துள்ளதாக தெரிவித்தார் தெலுங்கு உரிமையை பெற்ற சிவகுமார்.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டதட்ட 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்களாம்.
  • ‘இருமுகன்’ மற்றும் ‘தேவி’ படங்களை அடுத்து இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என்று ஆரோ சினிமாஸ் மகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
  • தமிழக உரிமையை ஆரோ சினிமாஸ் பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் ‘மூன்று முகம்’ ரீமேக்கில் சூப்பர் மனிதர்

சூப்பர் ஸ்டாரின் ‘மூன்று முகம்’ ரீமேக்கில் சூப்பர் மனிதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrenceரஜினிகாந்த் பட டைட்டில்களை வைப்பது அல்லது அவரது படங்களையே ரீமேக் செய்வது, இதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட்.

அந்த வரிசையில், இப்போது இணையவுள்ள படம் மூன்று முகம்.

இப்படம் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதில் 3 வேடங்களில் ஒன்றான அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் இன்றும் படுபிரபலம்.

இப்படம் வெளியாகி 35 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை ரீமேக் செய்யவிருக்கிறது.

இதில் மூன்று வேடங்களில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பல சமூக சேவைகளில், ஈடுபட்டு வரும் சூப்பர் மனிதரான லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் பட ரீமேக்கில் நடிப்பது பொருத்தம் தானே.

More Articles
Follows