வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

வாடிபோகும் ‘வாடிவாசல்;.; ‘பாகுபலி’ & ‘கேஜிஎஃப்’ பாணியில் சூர்யா – சிவா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை வரிசையாக இயக்கினார் இயக்குனர் சிவா.

இதில் விஸ்வாசம் படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா.

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

இதற்கு முன்பே நடிகர் சூர்யா படத்தை சிவா இயக்க ஒப்புக் கொண்டாலும் ரஜினிக்காக தங்கள் படத்தை ஒத்தி வைத்தனர்.

எனவே தற்போது சூர்யா மற்றும் சிவா இணையவுள்ள படம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் பீரியட் கதை என கூறப்படுகிறது.

இந்த படம் பாகுபலி, கேஜிஎஃப் போல இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாம்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஜூலை / ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

இதனிடையில் பாலா இயக்கும் ஒரு படத்திலும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

வெற்றிமாறன் சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்சன் ஒரு பக்கம் நடைபெற்று வந்த்தாலும் இதன் சூட்டிங் தொடங்க தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

மேலும் சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ பட பணிகளில் வெற்றிமாறன் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya – Siva film will be like Baahubali and KGF standard

டாணாக்காரனை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் ‘இரத்தமும் சதையும்’

டாணாக்காரனை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் ‘இரத்தமும் சதையும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது.

டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Vikram Prabhu’s next after Taanakaran is titled Rathamum Sadhaiyum

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர்.

ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.

ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம்.

ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் V.

சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றுகூட சொல்லலாம்.. அதுமட்டுமல்ல. இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்கவும் முடிவு செய்தனர்.

அந்தவகையில் கடந்த மாதம் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் இந்த சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.

திரைப்பட உருவாக்கத்திற்கு இப்படி ஒரு சாப்ட்வேரா என ஆச்சர்யப்பட்ட பிரபலங்கள் தாங்களும் இதை பயன்படுத்தி பார்ப்பதாக படக்குழுவினரை உற்சாகமூட்டினார்கள்.

மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா

‘Honeyflix’ software used in director V’s Vishamakkaran

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர்.

அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர். எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போதும் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்திற்கு புகழ் பெற்றவர்.

இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், காதல் அழிவதில்லை என பல படங்களை இயக்கியுள்ளார்.

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

ஆனால் எந்த படத்திலும் இவர் நாயகியை தொடாமல் நடிப்பார். இவரைப் போன்ற ஒரு திரைக் கலைஞனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.

இவர் இயக்கிய படங்களின் மூலம்தான் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் சிம்புவை இவரே கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்து தன் மனைவியாக்கினார்.

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது சிம்புக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

எனவே சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

How is Actor Director T Rajendar health condition now

Nakshatra Villas at Thiruporur by Roofvest – ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம் : ஓஎம்ஆரில் குடும்பத்துடன் ஓஹோன்னு வாழ செம ஆஃபர்

Nakshatra Villas at Thiruporur by Roofvest – ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ அறிமுகம் : ஓஎம்ஆரில் குடும்பத்துடன் ஓஹோன்னு வாழ செம ஆஃபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ மூலம் ரூஃப்வெஸ் நிறுவனம் தனது மைல்கல்லை பிரம்மாண்டமான முறையில் அடைந்துள்ளது.

OMR-ல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் மெட்ரோ ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

மாற்று வணிக மாவட்டமாக உருவெடுத்துள்ள இப்பகுதிகள் எதிர்காலத்தில் சென்னையை போன்று நவீன துணை நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

ரூஃப்வெஸ்ட்டின் நிர்வாக இயக்குநர் திரு ஸ்ரீதர் நாராயணன் கூறுகையில்,…

“ரூஃப்வெஸ்ட்டின் உந்து சக்திகளில் ஒன்று தெய்வீக வாழ்க்கை மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவை ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை என்ற கருத்தை வீட்டு வசதி உயர்த்துகிறது. எங்கள் முதல் பிரீமியம்-தெய்வீக OMR திட்டம் திருப்போரூரில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக, நாங்கள் நகரம் அதன் உள்கட்டமைப்பை அளவிடுவதையும், அதே நேரத்தில் தன்னை ஒரு தகவல் தொழில்நுட்ப மூலதனமாக நிலைநிறுத்துவதையும் கணித்து வருகிறோம். இந்த புதிய முயற்சியின் மூலம், நகரத்தில் ஒரு இனிமையான அமைதியான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் அதன் குடியிருப்பாளர்களுக்கு ஒப்பிட முடியாத வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் நம்புகிறேன். எங்கள் புதிய தெய்வீக சமூகத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முன்பதிவு செயல்முறையானது, வருங்கால வாங்குபவர்களுக்கு விரிவான தயாரிப்புத் தகவல் வழங்குகிறது,

மேலும் ஒவ்வொரு வகை யூனிட்டுக்கும் ஒரு ‘விலை-விவரம்’. வருங்கால வாங்குபவர்களிடம் இருந்து ஆர்வத்தின் வெளிப்பாடுகளை அறிய (EOI) உதவுகின்றன. இதன் மூலம் திட்டத்தின் தேவையை அளந்து, தரவு சார்ந்த விலை நிர்ணய முடிவை அடையலாம்.

கடந்த மூன்று தலைமுறையாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடு இணையற்ற சாதனைகள் நாங்கள் செய்துள்ளோம். 1989-ல் சென்னை முழுவதும் உள்ள லே-அவுட்களை பிளாட்களை விற்கத் தொடங்கியதில் இருந்து எங்களுக்கு ஒரு எளிமையான தொடக்கம் இருந்தது.

தரமான வீடுகளை உருவாக்கும் எங்கள் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்ததோடு, இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மலிவு வகை வீடுகளுக்கு மாறினோம்.

குறுகிய காலத்தில், நாங்கள் இந்தப் பிரிவில் முன்னோடியாகி, அந்த பிரிவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பல்வேறு துறைகள் மற்றும் ஊடகங்களில் இருந்து பாராட்டுகளை பெற்று மிகப்பெரிய மைல்கற்களை எட்டினோம்.

உண்மையில், நாங்கள் 40 க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கினோம், அவை அனைத்தும் வெளியீட்டு நாளில் விற்றுத் தீர்ந்தன என்று சந்தைப்படுத்துதல் துறை இயக்குனர் சாம் ஜார்ஜ் கூறினார்.

இப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையை விட அவர்கள் பல மடங்களு லாபத்தை பெறும் வகையிலான வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

உண்மையில், எங்களுடன் ப்ளாட்டுகள் மற்றும் வீடுகளில் முதலீடு செய்த 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வாடிக்கையாளர் சாம்ராஜ்யத்தை நாங்களும், எங்கள் தந்தை திரு. நாராயணனின் அன்னை பில்டர்ஸ் நிறுவனமும் உருவாக்கியுள்ளது.

எங்களது பாரம்பரியம் நிறைந்த நிறுவனம் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் பல மடங்கு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஆனார்கள். இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து, இப்போது நக்‌ஷத்ரா போன்ற மலிவு விலையில் ஆடம்பரமான சொகுசு வீடுகள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் மிக ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை வாடிக்கையாளர்கள் வியக்கும் வகையில் கொடுக்க இருக்கிறோம்.” என்றார்.

’ரூஃப்வெஸ் – நக்‌ஷத்ரா’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

குறைந்த உரிமையாளர் விலை
முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியது
புகழ்பெற்ற திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அருகில்
ECR, IT பூங்கா, மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு அருகில்.
சர்வதேச வடிவமைப்புகள்
உலகளாவிய தரமான கட்டுமானம்
கிட்டத்தட்ட ஜீரோ மெயின்டனன்ஸ்
9.62 ஏக்கர் கேட்டட் ஸ்டார் சமூகம்
அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் பல மடங்கு விலை உயரக்கூடிய சொத்து

C 888 030 9999

M [email protected]

W www.roofvest.in

ROOFVEST REAL ESTATE LLP DG Square, 4th Floor, 127 Radial Road (Pallavaram Thoraipakkam 200 Feet Road) Killkattalai, Chennai 600117

Video link :: https://www.youtube.com/watch?v=D9Ohl-DQqfw&feature=youtu.be

Website link : http://bavishagardens.com/nakshatra/

Roofvest is now launching its Premium Divine Residential Offering in Tiruporur Kelambakkam Roofvest – Nakshatra

கார்த்தி-சிம்பு படங்களை முடித்துவிட்டு அதிதியின் அடுத்த பட அப்டேட்

கார்த்தி-சிம்பு படங்களை முடித்துவிட்டு அதிதியின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன் மகள் அதிதியை தன் இயக்கத்தில் அறிமுகப்படுத்தாமல் முத்தையா இயக்கத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‛விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி.

இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யா – ஜோதிகா தயாரித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்டு மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ரிலீசாகவுள்ளது.

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

இதன்பின்னர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் அதிதி.

இந்த படத்தை முடித்துவிட்டு கவுதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம் அதிதி.

இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கப்பேலா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவுள்ளதாம்.

Aditi Shankar’s next film after finishing Karthi-Simbu movies

More Articles
Follows