தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், சூரி, ஸ்ருதிஹாசன் நடித்த படம் ‘வேதாளம்’.
தமிழில் ஹிட்டான இந்த படத்தை தெலுங்கில் ‘ரீமேக் செய்யவுள்ளதை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.
இதில் அஜித் பாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க இந்த படத்தை, மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடிப்பில், பில்லா படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘அண்ணாத்த’ படத்திலும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் ரஜினி, சிரஞ்சீவி ஆகிய இரு சூப்பர் ஸ்டார்களுக்கும் சிஸ்டராக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh to play Chiranjeevi sister in Vedalam remake