கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மங்காத்தா முதல் வலிமை வரை.. நரைத்த தலை முடி, நரைத்த தாடி என வலம் வருகிறார் நடிகர் அஜித்.

இதனால் அவரது படங்களிலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எனவே நாயகிகளுக்கும் பெரிதாக வேலை இல்லாமல் போய்விடுகிறது.

வேதாளம், வீரம் படங்களில் ஆக்சன் காட்சிகளே பலமாக அமைந்தன.

இடையில் வந்த விஸ்வாசம் படத்தில் நாயகியை விட தந்தை மகள் பாசமே பெரிதாக பேசப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தில் பெயரளவில் மட்டுமே நாயகி இருந்தார். வலிமை படத்தில் அது கூட இல்லை.

தற்போது அஜித் 50 வயதை நெருங்கிவிட்டார். இனி அவர் இளம் நாயகர்கள் போல நடிக்க விரும்பவில்லையாம். அதன்படி நாயகியுடன் ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டாம் என்கிறாராம்.

ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட எவ்வளவு பெரிய சீனியர் நடிகர்களாக இருந்தாலும் நாயகியுடன் சின்ன சின்ன ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டும் என்பார்கள்.

அப்படியிருக்கையில் டூயட் வேண்டாம் என அஜித் புது ரூட் போட விரும்புகிறாரோ என்னவோ..? அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

Will fans accept Ajith’s new decision ?

EXCLUSIVE பான் இந்தியா ஸ்டார் ஆசையெல்லாம் தேவையா விஜய்-அஜித்..? அப்படின்னா இதை செய்யலாமே.!

EXCLUSIVE பான் இந்தியா ஸ்டார் ஆசையெல்லாம் தேவையா விஜய்-அஜித்..? அப்படின்னா இதை செய்யலாமே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சினிமாவில் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வரும் வார்த்தை பான் இந்தியா படங்கள் என்பதே.

அதன்படி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

அப்போதுதான் நாமும் இந்தியா முழுக்க தெரிந்த நடிகர்களாக உயர்வோம் என நினைக்கின்றனர்.

அது தப்பில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் 1% கூட அவர்கள் செயல்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் படங்களுக்கு இந்தியா முழுக்க மார்கெட் உள்ளது. அவர்களது படங்கள் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலீசாகின்றன.

அதற்கேற்ப ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பல மாநிலங்களுக்கு சென்று தங்கள் படங்களை புரமோசன் செய்கின்றனர். எனவே அந்தந்த மாநில ரசிகர்களுக்கும் அவர்களது படங்களை பார்க்க ஆர்வம் வருகிறது.

ஆனால் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் 4 மொழிகளில் வெளியானது. விஜய்யின் பீஸ்ட் படமும் 4 மொழிகளில் வெளியானது. இவர்கள் இருவரும் தங்கள் பட தொடர்பான எந்த புரமோசன் நிகழ்ச்சியிலும் ஈடுபடவில்லை.

விஜய்யாவது சன் டிவியில் பேட்டி கொடுத்தார். ஆனால் அஜித் தன் பட பூஜைக்கு கூட வரமாட்டார்.

அஜித்தும் விஜய்யும் சரி.. தமிழகளவில் மட்டுமே படு பிரபலம். அண்டை மாநிலமான ஆந்திரா தெலுங்கானாவில் சிறிய அளவில் மார்கெட்டை பிடித்து வருகின்றனர்.

விஜய்க்கு கேரளாவில் மார்கெட் உள்ளது. அஜித்திற்கு அந்தளவுக்கு கூட இல்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தங்கள் பட புரமோசன் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்தால் அந்த படம் எப்படி வியாபாரமாகும். இதுபற்றி எல்லாம் சிந்திக்காமல் பான் இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என நினைக்கலாமா?

வலிமை மற்றும் பீஸ்ட் ஆகிய இரு படங்களும் நெகட்டிவ் விமர்சனங்களால் தோல்வியை தழுவியுள்ளது.

சமீபத்திய பான் இந்தியா படங்களான புஷ்பா, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களை எடுத்துக் கொண்டால்.. அந்த படக்குழுவினர் இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்கு சென்று தங்கள் படத்தை புரமோட் செய்துள்ளனர்.

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்தது. எங்கும் புஷ்பா ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை பற்றிய பேச்சாக எதிரொலித்து. எனவே படத்திற்கும் கட்டுக் கடங்காத கூட்டம் தியேட்டர்களில் கூடியது.

இந்த 3 படங்களும் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டையாடியது.

ஆனால் விஜய் அஜித் எந்தவொரு நிகழ்விலும் கலந்துக் கொள்ளாமல் பான் இந்தியா ஸ்டாராக ஆக வேண்டும் என நினைப்பது எப்படி நியாயமாகும்.?

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

Why Vijay Ajith films losing the pan-India race ?

எம்ஜிஆர் ஜெயலலிதா வடிவேலுவுடன் நடித்த ரங்கம்மா பாட்டி காலமானார்

எம்ஜிஆர் ஜெயலலிதா வடிவேலுவுடன் நடித்த ரங்கம்மா பாட்டி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 500க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி.

இவர் எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் நடிகை ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பது இவர்தானாம்.

நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார்.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் வடிவேலு உடன் பாட்டியாக நடித்திருந்தார்.

இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்துள்ளார்.

எனவே வறுமை இவரே வாட்டவே சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்புவிற்று வந்துள்ளார்.

தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது சில நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் உதவி செய்தனர்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாகவும் வறுமை காரணமாகவும் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்துக்கு சென்றுவிட்டார்.

அங்குதான் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார்.

Veteran Actress Rangamma passes away

வெற்றிமாறன் – லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’ பட அப்டேட்

வெற்றிமாறன் – லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை தன் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ். கதிரேசன்.

இதில் ‘ஆடுகளம்’ படம் ஆறு தேசிய விருதுகளை வென்றது.

தன் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்து இருக்கிறார் வெற்றிமாறன்.

தற்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ‘அதிகாரம்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ். கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை,வசனம் எழுத தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பான் இந்தியா படமாக இப்படம் தயாராகவுள்ளது.

‘அதிகாரம்’ படத்தை இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘எதிர் நீச்சல்’, ’காக்கி சட்டை’, ’கொடி’, ’பட்டாசு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், எஸ். கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.

Vetrimaaran – Raghava Lawrence joins for Adhigaaram

ஓப்பனா பேசுங்க..; கல்லூரி விழாவில் ஆட்டம் போட்டு ஓவியா அட்வைஸ்

ஓப்பனா பேசுங்க..; கல்லூரி விழாவில் ஆட்டம் போட்டு ஓவியா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் படங்கள்… பிரபலமான படங்கள் இல்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் நடிகை ஓவியா.

தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

இவர் தன் பிறந்தநாளை சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் மாணவ மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்

மேலும் ஹே… சாமீ.. சாமீ… ‘ஓ சொல்றியா மாமா..’ உள்ளிட்ட பாடல்களுக்கு மாணவிகளுடன் சேர்ந்து ஆடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை ஓவியா பேசியதாவது…

“தமிழக மக்கள் அன்பானவர்கள். அவர்களின் ஆதரவால்தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.

பெண் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெண்களுக்கு மட்டுமே சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகளிடம் ஆண்கள் எப்படி நடக்க வேண்டும என ஆண்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும.

கலாச்சாரம் என்ற பெயரில் ஆண் பிள்ளைகளிடம் எதையும் மூடி வைக்காதீர்கள். மறைக்காதீர்கள். ஓப்பனா பேசுங்கள்.

அப்பொழுதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வாழ்க்கை சிறியது. எதிர்காலத்தை நினைத்து வாழாமல் இன்றைய நாளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சினிமாவில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை போலவே நடிகைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு பேசினார் நடிகை ஓவியா.

Actress Oviya advice to her fans at recent college function

சின்னத்திரை சித்ரா தற்கொலைக்கு காரணம் யார்? கணவர் பரபரப்பு தகவல்

சின்னத்திரை சித்ரா தற்கொலைக்கு காரணம் யார்? கணவர் பரபரப்பு தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் இருந்தாலும் தமிழக சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை விஜே. சித்ரா

இவர் சின்னத்திரையில் விஜே ஆகவும் பணிபுரிந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதன் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவர் ஹேமந்தை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

நடிகை சித்ராவின் மரண வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இவரது கணவர் பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார்.

தன் மனைவி சித்ராவின் தற்கொலை பின்னணியில், பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு கும்பல் தன்னை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் புள்ளிகள் மற்றும் பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பல் என இருதரப்பிலும் இருந்து தமக்கு மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஹேமந்த் அளித்துள்ள புகாரில்…

என் மனைவி சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேறு வாரி இறைத்தவர்கள் முன்பு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

அவரின் தற்கொலைக்கு பிறகு, பணபலமும், அரசியல் பலமும் கொண்ட மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

அவர்களின் பண பலத்துக்கு முன்னால், என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது.

என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலின் பெயரை வெளியில் சொன்னால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள்.

உயிருக்கு பயந்து என் வீட்டிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன்.. என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி என்னுடைய உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘ என்று ஹேம்நாத் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Late actress Chithra husband talks about her death

More Articles
Follows