‘என்னோட எதிரியும் குருவும் வைரமுத்துதான்..’ கவிஞர் சினேகன்

‘என்னோட எதிரியும் குருவும் வைரமுத்துதான்..’ கவிஞர் சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu Snehanஎஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு. மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் சத்ரியன்.

யுவன் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படத்தின் பாடல் ஆசிரியர் சினேகன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லாருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார் வைரமுத்து.

ஆனால் என்னுடன் அவர் இதுவரை இணைந்து பணிபுரியவில்லை. அதை அவரே தவிர்த்து வருகிறாரா? தெரியவில்லை.

அவர் எனக்கு ஒரு வகையில் எதிரியாக தென்பட்டாலும், அவர்தான் எனக்கு ஆசான்.” என்று பரபரப்பாக பேசினார் சினேகன்.

Vairamuthu is my Guru also he is my enemy says Lyricist Snehan

அஜித்துக்கு பெருமை தேடித் தந்த அனிருத்

அஜித்துக்கு பெருமை தேடித் தந்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Anirudhஅமராவதியில் தொடங்கி இன்று 57 படங்களில் நடித்து முடித்துவிட்டார் அஜித்.

இதுவரை அவர் இணையத்தில் செய்யாத சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளார்.

இவரின் வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்பாடல் வெளியான நாள்முதல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.

இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் அஜித்துக்கு பெருமை தேடி தந்துள்ளார் அனிருத் என்று சொன்னால் அது மிகையல்ல.

Ajith Anirudh combination made record in Youtube by Aaluma Doluma Song

அட்லி இயக்கும் ‘விஜய் 61’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லி இயக்கும் ‘விஜய் 61’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeவிஜய் நடிப்பில் வெளியான பைரவா படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து அட்லி இயக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இது அவரது 61வது படமாகும்.

இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.

கிடைத்துள்ள தகவல்களின்படி கலைஞர்கள் விவரம் இதோ…

விஜய்யுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசையை கவனிக்க, ஜிகே. விஷ்னு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இந்த படத்தின் கதையை தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார்.

கலைக்கு முத்துராஜ், படத்தொகுப்புக்கு ஆண்டனி எல் ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படம் ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 1ஆம் தேதி இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

Vijay 61 movie cast and crew updates

ஜெயலலிதா பிறந்தநாளில் வரும் எமன்

ஜெயலலிதா பிறந்தநாளில் வரும் எமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yeman vijay antony postersகடந்த 2016 ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் வெளியாகவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், வர்தா புயல், பணத் தட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு போராட்டம் என பல காரணங்கள் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன.

தற்போது எல்லாம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால் தங்கள் படங்களை வெளியிட தயாராகிவிட்டனர் தயாரிப்பாளர்கள்.

இதில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay antonys Yeman release on February 24

சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து எக்ஸ் லவ்வர் சித்தார்த்..?

சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து எக்ஸ் லவ்வர் சித்தார்த்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha siddharthசில வருடங்களுக்கு முன்பு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட காதல் சித்தார்த்-சமந்தா காதல்தான்.

ஆனால் இவர்களின் காதல் ப்ரேக் அப் ஆனது.

அதன்பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கத் தொடங்கினார் சமந்தா.

நேற்றுமுன் தினம் (ஜனவரி 29) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஒருவருடத்திற்கு முன் போட்ட ட்விட்டரில் பதிவிட்ட பதிவை எடுத்து வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அவர் சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்கள் விடமாட்டார்கள் போலவே…

Did Siddharth tweet about Samantha engagement?

அந்த ட்வீட் இதோ…

‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கெடைக்கணும்னு எழுதியிருந்தா அத யாராலயும் மாத்த முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

samantha sidharth nichayam

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களை கௌரவித்த சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களை கௌரவித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan ரெமோ படத்தின் மாபெரும் வெற்றி மூலம் முன்னணி நடிகர்களின் வரிசையில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக Youth Icon விருது ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதை பெற்றவுடன் ‘ஜல்லிக்கட்டு தொடர்பான அறவழிப் போராட்டங்களை நடத்தி இந்த உலகையே தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டனர் நம் இளைஞர்கள்.

அந்த புரட்சி இளைஞர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan dedicated his Youth Icon award to Jallikattu Protest Students

More Articles
Follows