தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள சத்ரியன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் கலந்துக் கொள்ளவில்லை.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது…
சிவாஜி, பிரபுவை விட ஒரு படி ஆக்ஷனில் உயர்ந்து நிற்கிறார் விக்ரம்பிரபு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
எனக்கு இளையராஜா மற்றும் கமலுடன் பணி புரிய ஆசை.
ஆனால் அவர்கள் சினிமா துறையில் அனைத்தையும் அறிந்தவர்கள்.
அவர்களுடன் வேலை செய்யும்போது என்னுடைய கருத்தை சொல்ல முடியாது.
எனவே அவர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது.
இங்கே பேசிய கவிஞர் சினேகன், வைரமுத்துவை தன் எதிரியாக குறிப்பிட்டார்.
என்னை வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.
ஏனென்றால் என்னுடைய சந்தனதேவன் படத்தில் அவர்கள் இருவரும் பணிபுரிகின்றனர்.
வேறுவழியில்லை. இரண்டு எதிரிகளையும் வேலை வாங்கவேண்டும்” என்றார்.
I cant work with Illayaraja and Kamalhassan says Director Ameer