க்ரைம் த்ரில்லர் படத்திற்காக தான்யாவை இயக்கும் எஸ்ஆர். பிரபாகரன்

க்ரைம் த்ரில்லர் படத்திற்காக தான்யாவை இயக்கும் எஸ்ஆர். பிரபாகரன்

Tanya Ravichandranசுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய S.R.பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

தன் நிறுவனம் மூலம் தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.

கிரைம் த்ரில்லாராக உருவாகும் ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிசந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.

நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோரை இயக்குனர் S.R.பிரபாகரன் அறிமுகப்படுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – S.R.பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் – பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ்
ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம்
கலை – மைக்கேல் ராஜ்
படத்தொகுப்பு – பிஜு.V. டான் பாஸ்கோ
ஸ்டில்ஸ் – பாலு
தயாரிப்பு நிர்வாகம் – P.சுரேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Actress Tanya Ravichandran plays lead role in SR Prabakarans next film

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலுக்கு கௌதம் மேனன் நன்றி

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலுக்கு கௌதம் மேனன் நன்றி

oru manam dhruva natchathiramகெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’

இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் 3 வருடங்களாக பல தடைகளை சந்தித்து வந்ததால் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த படத்தின் ’ஒரு மனம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியானது.

இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில்… கவிஞர் தாமரை, ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு நெகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Gautham Menon thanked Thamarai and Harish for Oru Manam

அதர்வா-அனுபமா இணையும் ‘தள்ளிப் போகாதே’..; வைரலாகும் டிரைலர்

அதர்வா-அனுபமா இணையும் ‘தள்ளிப் போகாதே’..; வைரலாகும் டிரைலர்

thalli pogatheyஅதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் விஐபி புகழ் அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ள படம் தள்ளிப் போகாதே.

நானி, நிவேதா தாமஸ், ஆதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘நின்னுக் கோரி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் தள்ளிப் போகாதே.

தமிழில் கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Atharvaa – Anupama starring Thalli Pogathey trailer goes viral

சூரியிடம் பண மோசடி செய்த விஷ்ணு விஷாலின் தந்தை; அதிர்ச்சியான தகவல்கள்

சூரியிடம் பண மோசடி செய்த விஷ்ணு விஷாலின் தந்தை; அதிர்ச்சியான தகவல்கள்

vishnu vishal fatherவெண்ணிலா கபடி குழு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி.

இதனால் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் சூரி முக்கிய கேரக்டரிலும் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.

அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளதாக தெரிவித்து, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்று விற்பனை செய்தனர்.

இதன்பின்னர் நிலம் வாங்கிய பிறகு பல பிரச்சினைகள் இருப்பது சூரிக்கு தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.

அந்த சம்பந்தபட்ட இடத்திற்கு செல்ல பாதையும் இல்லை, அரசு அங்கீகாரமற்ற மனை என்பது தெரிய வந்ததும் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நடிகர் சூரி ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரமேஷ் குட்வாலாவிடம் இது பற்றி கேட்டுள்ளார்.

நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பி தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் அவர் பதிவு செய்ததாக தெரிகிறது.

ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். ரூ. 2.70 கோடி தரவில்லை.

மீதி பணத்தை தருவதாக கூறி பல மாதங்களாக ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் ஏமாற்றி வந்ததால் நடிகர் சூரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்டுகிறது.

இதனிடையே ரமேஷ் குடவாலா 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். தொடர்ந்து சூரிக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் குடவாலா காவல் அதிகாரியாக இருந்த போது நிலப்பிரச்சனை என்று புகார் வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் அதை மறைத்து 5.25 கோடிக்கு வாங்கியதாக ஆவணங்கள் ஏற்பாடு செய்து அதற்கு ஏற்றவாறு ஊர் தலைவரிடம் போலி சான்றிதழ் உருவாக்கி நடிகர் சூரியை ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது.

சூரி பணத்தை திருப்பி கேட்கும் போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தராததால் 2018-ம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் எந்த வழக்கும்பதிவு செய்யப்படவில்லை.

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியாக இருந்த ரமேஷ் குட்வாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கி கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்தனர்.

இதனை ஏற்று கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 406-நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 465- பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 471- பொய்யானதை உண்ணமை என நம்ப வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் பின் 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயங்குவதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில மோசடி விவகாரத்தில் போலியாக ஆவணம் உருவாக்கி கோடிக்கணக்கில் முன்னாள் டிஜிபியே ஈடுபட்டது காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பொய்யான குற்றச்சாட்டை படித்ததும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Soori files an FIR against Vishnu Vishals father

முத்தையா இயக்கத்தில் மீண்டும் ‘கும்கி’ ஜோடி.; சன் டிவி-யில் படம் ரிலீஸ்.!?

முத்தையா இயக்கத்தில் மீண்டும் ‘கும்கி’ ஜோடி.; சன் டிவி-யில் படம் ரிலீஸ்.!?

director muthaiahபிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விக்ரம் பிரபு.

இதில் நாயகியாக நடித்திருத்நார் லட்சுமி மேனன்.

தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘தேவராட்டம்’ படத்தை தொடர்ந்து இயக்கி வருகிறார் முத்தையா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை குறுகிய கால படமாக எடுத்து தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்கின்றனர். அதாவது சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளனர். மேலும் சன் நெக்ஸ்டிலும் வெளியிடுகின்றனர்.

2021 பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

இப்படத்திற்கு ‘பேச்சி’ என்று பெயரிடப்பட உள்ளதாகவம் இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முத்தையா எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vikram Prabhu and Lakshmi Menon joins for a new film

பிரபாஸ்-தீபிகா படுகோனே படத்தில் இணைந்தார் அமிதாப்பச்சன்

பிரபாஸ்-தீபிகா படுகோனே படத்தில் இணைந்தார் அமிதாப்பச்சன்

amitabh in prabhas filmராதா கிருஷ்ணா இயக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இதனையடுத்து இப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை ‘மகாநடி’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.

இந்தாண்டு வைஜெயந்தி நிறுவனத்தின் 50வது ஆண்டு என்பதால் இந்த படத்தை பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது முடிவாகவில்லை.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

நாக் அஸ்வின் படத்தை முடித்துவிட்டு, ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

Amitabh Bachhan joins Prabhas – Deepikas new film

More Articles
Follows