தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே ரசிகர்களும் அரசியல் கலைஞர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள பிரபல திரை ஆளுமைகளும் ரஜினிக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு பல படங்களில் பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ரஜினியை வாழ்த்தி ஒரு கவிதை மழை பொழிந்துள்ளார்.
அந்த பதிவில்…
தங்களுக்குத் தேவையான
ஏதோ ஒரு மின்னூட்டம்
உங்களிடம் உள்ளதாக
மக்கள் நம்புகிறார்கள்
அதை
மிக்க விலைகொடுத்துத்
தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
கலை என்ற பிம்பத்தைவிட
உங்கள்
நிஜவாழ்க்கையின் நேர்மைதான்
என்னை வசீகரிக்கிறது
எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள்
பலம் பலவீனம்
பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்
அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவேன்.
உடல் மனம் வயது கருதி
நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும்
வாழ்க்கையெல்லாம்
வழிவகுக்கும்
வாழ்த்துகிறேன்
விரும்பும்வரை வாழ்க!
#Rajinikanth #Rajinikanthbirthday
Lyricist Vairamuthu wishes Rajini on his birthday