தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் இதயங்களை பற்றி கொண்ட ‘இறுகப்பற்று’

தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் இதயங்களை பற்றி கொண்ட ‘இறுகப்பற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் ’இறுகப்பற்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’.

இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி, சானியா ஐயப்பன், விக்ரம் பிரபு, விதார்த் மற்றும் ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் திறம்பட நடித்திருந்தனர்.

திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கதை, திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

அர்த்தமுள்ள கதை, சுவாரசியமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் மற்றும் யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றின் காரணமாக இது அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் பெருவாரியான பாராட்டைக் குவித்தது.

வெளியான சில நாட்களிலேயே, சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், படத்தின் சிறிய காணொலிகள், திரையரங்குக்கு வெளியே ரசிகர்களின் கருத்து, படத்தின் வசனங்களை ட்வீட்டாகப் பகிர்தன் என நெட்டிசன்கள் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும், படம் நேர்மறையாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் பகிர்ந்திருந்தனர். மேலும் இந்தப் படம் தொடர்பான பல்வேறு ஆரோக்கியமான விவாதங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

திரையரங்கில் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல OTT தளமான நெட்ஃபிக்ஸில் இறுகப்பற்று தனது ஸ்ட்ரீமிங் பயணத்தைத் தொடங்கியது.

திரையரங்க வெளியீடு போலவே ஓடிடியில் வெளியான பிறகும் உடனடியாக மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற ஆரம்பித்தது.

முக்கியமாக வெளியான நாளிலிருந்து இன்று வரை நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் ‘இறுகப்பற்று’ தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. படத்தின் தரத்திற்கு இதுவே சான்றாகும்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இறுகப்பற்று திரைப்படத்தின் அற்புதமான வரவேற்பு எங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மக்களின் பாராட்டுகளைப் பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறோம். உணர்வுப்பூர்வமான, உண்மைத்தன்மையை கொண்ட ஒரு கதைக்களம் பார்வையாளர்களிடம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆழமான, தனித்துவமான கதைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற எங்கள் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்”

இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் கரு, அதன் கதாபாத்திரங்கள், அவை பேசும் உணர்ச்சிகள் என அனைத்தும் எல்லை கடந்து அனைவரையும் தொடும், உலகளாவிய ரசிகர்களுக்கானது.

இதனால், படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து படத்தின் ரீமேக் உரிமைக்கான போட்டி அதிகரித்துள்ளது. பிற மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு இந்த நெகிழ்ச்சியான படைப்பைக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பார்வையாளர்களின் தொடர் ஆதரவிற்கு ‘இறுகப்பற்று’ படக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

OTT தரவரிசையில் முக்கிய இடம்பிடித்ததோடு, இப்படத்தின் தாக்கம் பல ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் வாழும் என்று நம்புகிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமாக, ‘இறுகப்பற்று’ இன்னும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுகப்பற்று

“Irugapatru” movie tops in OTT platfrom

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடிகர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது.

இன்று நவம்பர் 21 எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் ‘விஸ்காம்’ எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சிஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் அவர்கள் ‘திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் ‘விருதினை வழங்கினார்.

விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
திரு அருண்குமாரும் உடன் இருந்தார்.

இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.

எஸ்.ஏ. சந்திரசேகர்

Actor Director SA Chandrasekar got doctorate at MGR University

கிராமத்துவாசிகளுடன் மனைவி மகளை தேடி அலையும் ஆர்யா

கிராமத்துவாசிகளுடன் மனைவி மகளை தேடி அலையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது.

இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது.

தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது.

இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில்…

”தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது OTT எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.

இதன் கருத்தாக்கம், திகில் & த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய OTT சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை.

மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது.‌ இந்திய OTT இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும்.

பல தருணங்களில் படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு.

ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.‌” என்றார்.

‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடரில் ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி என் சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.‌

இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது.

இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்த ஒரிஜினல் திகில் தொடர் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

அதனுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் சப்- டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Arya Divya Pillai starrer The Village web series release on 24th Nov.

டூப் வேண்டாம்.. கேரவன் வேண்டாம்.; நயன்தாரா அர்ப்பணிப்பில் ‘அன்னபூரணி’

டூப் வேண்டாம்.. கேரவன் வேண்டாம்.; நயன்தாரா அர்ப்பணிப்பில் ‘அன்னபூரணி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை.

இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது.

இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் ‘அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது.

சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அன்னபூரணி

படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு ‘அன்னபூரணி’ படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.

அன்னபூரணி

Don’t Dope and Nayanthara Dedication ‘Annapoorani’

சினிமாவில் பெண்கள் மீது இளக்காரப் பார்வை.; மன்சூர் மன்னிப்பு கேட்க பாரதிராஜா வலியுறுத்தல்

சினிமாவில் பெண்கள் மீது இளக்காரப் பார்வை.; மன்சூர் மன்னிப்பு கேட்க பாரதிராஜா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரிஷா குறித்து நடிகர் மன்சூர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. த்ரிஷாவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்த நிலையில் தற்போது நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தலைவர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

Ref.No. TFAPA/610

NOVEMBER 21, 2023

சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம்

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத் தக்கது.

அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.

நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.
தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில்,

பாரதிராஜா,
தலைவர்

Bharathiraja statement regarding Trisha and Mansoor issue

‘பிக்பாஸ்’ சிபி – குஷிதா ஜோடியுடன் ‘ஜீவி’ பட வசனகர்த்தா கூட்டணி

‘பிக்பாஸ்’ சிபி – குஷிதா ஜோடியுடன் ‘ஜீவி’ பட வசனகர்த்தா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரவுன் பிக்சர்ஸ் எஸ்.எம்.இப்ராகிம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.

வஞ்சகர் உலகம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த சிபி இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

 Actor Cibys

இந்த படத்திற்கு ஜீவி பட வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுத, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணன், படத்தொகுப்பு பிரதீப், இசையமைப்பாளர் கேபர் வாசுகி மேற்கொண்டுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20-ம் தேதி சென்னையில் துவங்கியது.

 Actor Cibys

Bigg Boss fame Actor Cibys new project updates

More Articles
Follows