சூர்யா-கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துடன் மோதும் தொட்ரா

சூர்யா-கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துடன் மோதும் தொட்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thodraa movie release will clash with Kadaikutty Singam on 13th Julyஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை மதுராஜ் இயக்கியுள்ளார்.

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மிக முக்கியமான கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

உத்தமராஜா இசையமைத்துள்ளார்.. ஏகாம்பரம், கார்த்திக் ராஜா ஆகியோரிடம் பணிபுரிந்த செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ஆறாது சினம், ’ ’தலைமுறைகள்’ ஆகிய படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

உறியடி படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்த கோபால் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள தொட்ரா படம் ஜுலை 13 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

படம் பார்த்த இயக்குநர் கே பாக்கியராஜ் தனது பெயரை மதுராஜ் காப்பாற்றி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஜே எஸ் கே, ”படம் எனக்கு பிடித்திருந்தது… தொட்ரா ஒரு ஃபீல் குட் மூவி” எனவும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மதுராஜிடம் படம் பற்றி கூறியதாவது… “ ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் முதல் படம் என்பது மறுபிறப்பு மாதிரி… அதற்கு தாயாக இருப்பவர் தயாரிப்பாளர்தான்.

எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் உண்மையாக ஒரு தாய் போல இந்த சினிமாவை நேசித்ததால்தான் என்னால் இவ்வளவு வேகமாக ஒரு தரமான படத்தை எடுக்க முடிந்தது.

ஒவ்வொரு அறிமுக இயக்குநருக்கும் இப்படியொரு தயாரிப்பாளர் அமையவேண்டும். பிருத்விராஜன் ஒரு ஸ்டார் வீட்டு பிள்ளை போல் இல்லாமல்.. வெகு இயல்பாக நடந்துகொண்டார்.

ரோட்டிலேயே காருக்கு பின்னால் தனது உடையை மாற்றிக் கொண்டு ஷாட்டுக்கு தயாராகிவிடுவார். இந்த படத்தில் ஒரு மெச்சூர்டான நடிப்பை பார்க்க முடியும்,.

வீணா அழகான யதார்த்தமான நடிப்பில் கெட்டி… முதல் சில நாட்கள் மொழி தடுமாற்றம் இருந்தாலும்.. பணக்கார வீட்டு கிராமத்துப் பெண்..காதல் திருமணம் செய்துகொண்டு எளிமையாக வாழும் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

படம் முடிந்து வரும்போது இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எம் எஸ் குமார் மனதில் ஒட்டிக்கொண்டு நிற்பார்கள்.

மிக முக்கியமாக.. இந்த படத்தில் காதல் கட்டப் பஞ்சாயத்துகள் அதன் தீவிரத்தால் பாதிக்கப்படும் காதலர்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம்.

எங்க ஊரில் இந்த வேலையை செய்பவர்களுடன் கூடவே பல நாட்கள் தங்கியிருந்து நேரில் பார்த்த சம்பவங்களை இதில் பதிவு செய்துள்ளேன். ஒரு பையனை நெடுஞ்சாலையில் பாரிகார்டில் கட்டிப்போட்டிருந்தனர்.

சில பல பேச்சுவார்த்தைகள்.. பணப்பேரம் நடந்த பின், அந்த பையனை பெண்ணிடமிருந்து பிரித்து பெங்களூருக்கு மிரட்டி அனுப்பி வைத்தனர்.

அந்த ஒரிஜினல் தாதாக்களை என் படத்தில் அவர்களாகவே நடிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு தாங்கள் நடிக்கிறோம் என்பது மட்டும்தான் தெரியும்.

தாங்கள் நிஜத்தில் செய்யும் வேலையைத்தான் படத்திலும் செய்கிறோம் என்பது படம் வெளியானால்தான் அவர்களுக்கே தெரியும். படம் வெளியான பின் அவர்களுக்கு ஓடி ஒளிய வேண்டுமா? இல்லை மன்னிப்பார்களா? தெரியாது.

படம் சொன்ன மாதிரி வேகமாக அழகாக எடுத்துவிட்டோம். ஆனால்.. அந்த பெரிய படம் வருகிறது.

இந்த படம் வருகிறது.. ஸ்ட்ரைக்.. இப்படி சில வாரங்கள் கடந்து இப்போது ஜூலை 13ம் தேதி பிரசவம்.

ஜாதிப்போராட்டம்.. காதலுக்கு எதிர்ப்பு என இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனகளை மையப்படுத்தி கதை சொல்லியிருப்பதால் தொட்ரா படம் இளைஞர்களுக்கு நெருக்கமாக போய் உட்காரும் என நம்புகிறேன்.

கடைக்குட்டி சிங்கம் உடன் வெளியாகிறது. பெரிய படம் என்ற பயம் இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய படம் வருகிறது.. வேறு வழியில்லை.

தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்க முடியாது.. படத்தின் மீதும், கதையின் மீதும் உள்ள நம்பிக்கையில் வருகிறோம்,” என்றார் இயக்குநர் மதுராஜ்.

கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தை பாண்டிராஜ் இயக்க நடிகர் சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thodraa movie release will clash with Kadaikutty Singam on 13th July

thodraa audio launch

22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி

22 வருடங்கள் பிறகு மீண்டும் மோகன்லால்-பிரபு-பிரியதர்ஷன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu reunites with Mohanlal and Priyadarshan after 22 yearsபிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லான், பிரபு நடிப்பில் 1996-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘காலபனி’.

தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸானது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார்.

தற்போது 22 வருடங்கள் பிறகு மீண்டும் மூவரும் இணைகின்றனர்.

பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர்.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

Prabhu reunites with Mohanlal and Priyadarshan after 22 years

Prabhu reunites with Mohanlal and Priyadarshan after 22 years

S.P. ஹோசிமினுக்காக மீண்டும் இணைந்த சத்யராஜ்-ஏஆர்.ரஹ்மான்

S.P. ஹோசிமினுக்காக மீண்டும் இணைந்த சத்யராஜ்-ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman and Sathyaraj launched Hosimins Ringa App1994ல் வெளியான படம் வண்டிச்சோலை சின்ராசு.

மனோஜ் குமார் இயக்கிய இப்படத்தில் சத்யராஜ் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தற்போது வேறொரு இயக்குனர் S.P. ஹோசிமினுக்காக இவர்கள் இணைந்துள்ளனர். அதுப்பற்றிய விவரம் வருமாறு…

வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் RingaApp என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் S.P.ஹோசிமின்.

இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் பரத், ரேணுகா மேனன் நடித்த பிப்ரவரி 14 , சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த ஆயிரம்விளக்கு ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நட்சத்திரங்கள் ரெஸ்டாரண்ட், கிரிக்கெட், கால் பந்து அணி, ஆன்லைன் வர்த்தகம் என வெவ்வேறு துறைகளில் ஷாருக் கான், சிரஞ்சீவி, ஆர்யா, ஜீவா, அனிருத் எனப் பலரும் கால் பதித்து சாதித்து வருவது டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல இயக்குனர் S.P.ஹோசிமின் தொழில்நுட்பத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் Ringa Technologies என்ற தனது இன்டர்நெட் நிறுவனத்தின் கீழ் RINGAAPP என்ற Instant Service Booking Mobile Appஐ துவக்கியுள்ளார்.

நமது அன்றாட தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனே குறித்த நேரத்தில் திறம்பட செய்து முடிக்க ஒரு நம்பிக்கையான நபரை நாம் தினமும் தேடுகின்றோம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம் அப்படிப்பட்ட யாராவது இருக்கின்றார்களா என கேட்கிறோம் இது வாடிக்கை. ஆனால் நமது நேரத்தில் நமது பணிகளை நாம் நினைத்தவாறு குறைந்த கட்டணத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க ஆள் கிடைப்பதில்லை. இந்த கவலை இனி தேவையில்லை. ஏனென்றால் RingaApp இனி உங்களுக்கான பணியாளை உடனே தரும்.!

இனிமேல் வீட்டில் குழாய் ரிப்பேரா? அதை சரி செய்யும் பிளம்பர் வேண்டுமா ? ஏ.சி வேலை செய்யவில்லையா ? ஏ.சி.மெக்கானிக் வேண்டுமா? கம்யூட்டர் வேலைசெய்யவில்லை. அதை வீட்டிற்கு வந்தே சர்வீஸ் செய்ய வேண்டுமா…? இதுமட்டுமின்றி இண்டீரியர் டெக்கரேசன், சார்ட்டட் அக்கௌன்ட், வெப் டிசைனிங் என நீண்டுகொண்டே போகும் உங்கள் எந்த ஒரு தேவைக்கும் RingaApp மூலம் ஆன்லைனில் உங்கள் ஏரியாவில் அதாவது உங்களுக்கு அருகில் இருப்பவரை புக் செய்து வரவழைத்து, குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் GPS வாயிலாக தான் புக் செய்த சேவையாளர்களை எளிதாக track செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் வெளிவந்திருக்கும் RingaApp ஐ உடனே டவுன்லோடு செய்து பயன் பெறலாம்.

அனைவரையும் ஊக்குவிக்கும் மனப்பான்மை கொண்ட இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான் அவர்களிடமும், நடிகர் சத்யராஜ் அவர்களிடமும் நல்லாசி பெற்று இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர்களது வாழ்த்தும், பாராட்டும் இந்த செயலியின் பின் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப இளைஞர்களின் கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

Click
Android https://tinyurl.com/ringauser

IOS https://tinyurl.com/ringaios

AR Rahman and Sathyaraj launched Hosimins Ringa App

சிக்கலில் சிவகார்த்திகேயனின் சீமராஜா ரிலீஸ்.?; விஷால் முடிவு என்ன.?

சிக்கலில் சிவகார்த்திகேயனின் சீமராஜா ரிலீஸ்.?; விஷால் முடிவு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans SeemaRaja release date into troubleபொன்ராம் – சிவகார்த்திகேயன் 3வது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’.

இப்படத்தை ரெமோ, வேலைக்காரன் படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

இமான் இசையமைக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்க, சமந்தா நாயகியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இன்றுடன் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பே இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர்.

அதாவது வருகிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே எல்லா தமிழ் படங்களின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பாளர் சங்கமே முடிவு செய்து வருகிறது.

அவ்வாறு இருக்கையில் சென்சாருக்கு படமே அனுப்பப்படாத நிலையில் சீமராஜா படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் படத்தின் ரிலீசின் போது சிக்கல்கள் உருவாகும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இதனால் சீமராஜா ரிலீஸ் குறித்து சங்கத் தலைவர் விஷால் என்ன முடிவு எடுப்பார்? என கோலிவுட் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.

Sivakarthikeyans SeemaRaja release date into trouble

ரஜினியின் 2.0 படத்தில் மீண்டும் ரூ. 100 கோடியை ஏற்றிய ஷங்கர்

ரஜினியின் 2.0 படத்தில் மீண்டும் ரூ. 100 கோடியை ஏற்றிய ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0ரஜினிகாந்தை வைத்து 3வது முறையாக ஷங்கர் இயக்கி வரும் படம் 2.0.

லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர்.

படத்தின் சூட்டிங் முடிவடைந்து பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் நடந்து முடிந்து போதிலும் இன்னும் படம் வெளியாகவிலை.

கிட்டதட்ட ஒரு ஆண்டுகளாக இதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

ஏற்கெனவே கிராபிக்ஸ் காட்சிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட ரூ. 100 கோடியை ஏற்றியிருந்தார் ஷங்கர்.

தற்போது மீண்டும் ஒரு முறை 100 கோடியை இந்த பட்ஜெட்டில் சேர்த்துவிட்டாராம்.

தற்போத்து வரை இதன் பட்ஜெட் ரூ. 550 கோடியை தொட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படத்தின் சூட்டிங்கின் போதே படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கியிருக்கிறார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 2019 ஆண்டு இப்படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

எஸ்வி சேகரை அரெஸ்ட் செய்யாத அரசு மன்சூர் அலிகானை அரெஸ்ட் செய்தது ஏன்? – பாரதிராஜா

எஸ்வி சேகரை அரெஸ்ட் செய்யாத அரசு மன்சூர் அலிகானை அரெஸ்ட் செய்தது ஏன்? – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja condemned Actor Mansoor Alikhan arrestதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜனநாயக ஆட்சியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது எல்லோரும் ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கோ, கருத்துச் சுதந்திரத்திற்கோ ஆளும் அரசுகளோ, மற்ற யாருமோ தடைபோடுவதில்லை. ஒன்றின் மீது நம்முடைய நம்பிக்கை இழக்கும் போது தான் விமர்சனம் அங்கே எழுகிறது.

தற்போது தமிழகத்தில் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது.
நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான்.

உணர்ச்சி மேலிடம் போது கோபம் வெளிப்படுவது இயல்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல் துறை, பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

உடனடியாக கைது செய்ய வேண்டிய அவரை விட்டுவிட்டு மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள்.

ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் உங்கள் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது.

மன்சூர் அலிகான் கைது செய்வதில் காட்டிய அக்கறையை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால் உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ மன்சூர் அலிகான் குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார்.

ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.

 பின் குறிப்பு:  ஜூலை 12-ந்தேதி எஸ்.வி.சேகர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Director Bharathiraja condemned Actor Mansoor Alikhan arrest

More Articles
Follows