தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.
இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அனிதா சம்பத் பேசுகையில்…
“இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
இந்த திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் மார்ட்டின் வழங்கி இருக்கிறார். ” என்றார்.
Anitha Sampath speech at deiva machan press meet