தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.
இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகை தீபா சங்கர் பேசுகையில்…
“சொப்பன சுந்தரி படத்தில் நான் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாக விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் குறைத்து நடிக்க முயற்சிக்கிறேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
பாண்டியராஜனுடன் நடித்த அனுபவம் மறக்க இயலாது. நான் சின்ன வயதில் இருந்த போது பாண்டியராஜன் திரையில் தோன்றி பாடிய ‘காதல் கசக்குதையா..’ என்ற பாடலை பார்த்து ரசித்தேன். அந்த காலகட்டத்தில் நாங்கள் பார்த்து ரசித்த கதாநாயகர்களுள் பாண்டியராஜனும் ஒருவர்.
இந்தப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் திறமையாக நடித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.
I’m fan of Actor Pandiyarajan says Deepa Sankar