ஆதி – ஹன்சிகா இணைந்த ‘பார்ட்னர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

ஆதி – ஹன்சிகா இணைந்த ‘பார்ட்னர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்னர்’.

இப்படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பாட்னர் ‘ படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பார்ட்னர்

Aadhi’s partner movie release date announced

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்திலும் பிரபல நடிகர்

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்திலும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற 10-ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார்.

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம், அர்ஜூன் என பலர் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில், ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவரின் காட்சிகள் 20 நிமிடம் திரையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் இணைந்துள்ள நிலையில் இந்த படத்திலும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Tollywood hero joins rajini’s ‘Thalaivar 170’

கமலுடன் நடித்த குள்ள நடிகர் மோகன் மரணம்.; திரையுலகினர் அஞ்சலி!

கமலுடன் நடித்த குள்ள நடிகர் மோகன் மரணம்.; திரையுலகினர் அஞ்சலி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேலம் மாவட்டம், மேட்டுரைச் சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன்(60).

கடந்த 1989ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன்.

பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

மேலும் ‘நான் கடவுள்’, ‘அதிசய மனிதர்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காலப் போக்கில் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் இறந்த மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மேட்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த மோகனுக்கு 2 சகோதார்கள், 3 சகோதரிகள் உள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

kamal co starred actor mohan passes away

Jailer Special show updates : காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்

Jailer Special show updates : காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்று அளித்துள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், ‘ஜெயிலர்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு வருகிற 6ம் தேதி தொடங்கவுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகத்தில் 600 முதல் 700 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

மேலும், சமீபத்தில் வெளியான ‘விடுதலை’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ உள்ளிட்ட பெரிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini’s Jailer movie special show cancelled

OFFICIAL பீட்சா ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 4’ அறிவிப்பு

OFFICIAL பீட்சா ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 4’ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

தரமான திரைப்படங்கள் மற்றும் தேடல் உள்ள திறமைகளின் தாயகமான தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சி.வி. குமார் தயாரித்த பீட்சா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா’ மற்றும் ‘பீட்சா 3: தி மம்மி’ திரைப்படங்களும் தொடர் வெற்றியை பெற்றன.

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்குமனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீட்சா 3: தி மம்மி’ ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உலகெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, ‘பீட்சா’ திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்…

“பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி ‘பீட்சா’ வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது.

எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறினார்.

Producer CV Kumar announces Pizza 4 movie

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் மேன் கதையை சொல்ல V-1 ஹீரோ இயக்குனரானார்

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் மேன் கதையை சொல்ல V-1 ஹீரோ இயக்குனரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும். இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்.

Indias first post man story Harkara

More Articles
Follows